சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய 125 கி.மீ., சுற்றிச்சென்ற கிராம மக்கள்

Added : நவ 23, 2021
Share
Advertisement
வேலூர்: மோர்த்தானா அருகே, இறந்த மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய, 125 கி.மீ., சுற்றிக்கொண்டு கிராம மக்கள் சென்றனர்.வேலூர் மாவட்டம், மோர்த்தானா அருகே போடியப்பேட்டையை சேர்ந்தவர் முனியம்மாள், 60. கணவர் இறந்ததால், நத்தமேட்டிலுள்ள அவரது மகள் மணிமொழி, 26, வீட்டில் தங்கியிருந்த அவர், நேற்று முன்தினம் இறந்தார். அவரது உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய உறவினர்கள் முடிவு செய்தனர்.

வேலூர்: மோர்த்தானா அருகே, இறந்த மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய, 125 கி.மீ., சுற்றிக்கொண்டு கிராம மக்கள் சென்றனர்.


வேலூர் மாவட்டம், மோர்த்தானா அருகே போடியப்பேட்டையை சேர்ந்தவர் முனியம்மாள், 60. கணவர் இறந்ததால், நத்தமேட்டிலுள்ள அவரது மகள் மணிமொழி, 26, வீட்டில் தங்கியிருந்த அவர், நேற்று முன்தினம் இறந்தார். அவரது உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய உறவினர்கள் முடிவு செய்தனர். மழையினால் போடிப்பேட்டை செல்லும் தரைப்பாலம் மூழ்கியது. இதனால் அவரது உடலை வேனில் ஏற்றிக் கொண்டு, அருகிலுள்ள ஆந்திரா மாநிலம் சித்தூர், சைனகுண்டா, பலமனேர் வழியாக, 125 கி.மீ., தூரத்தை கடந்து போடியப்பேட்டைக்கு நேற்று சென்றனர். அங்கிருந்து சுடுகாட்டிற்கு செல்லும் வழி வெள்ளநீரால் சூழப்பட்டது. இதனால் சடலத்தை வயல்வெளியில் எடுத்து வந்தபோது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பேச்சுவார்த்தையில் சமாதானமடைந்து சடலத்தை எடுத்துச்செல்ல அனுமதித்தனர். பின் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. மொத்தம், 25 கி.மீ., செல்ல வேண்டியவர்கள், தரைப்பாலம் மூழ்கியதால், 125 கி.மீ., தூரம் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டது. இப்பகுதியில் மேம்பாலம் கட்ட வேண்டுமென, அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை அதிகாரிகள் இதுவரை கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X