அரசியல் செய்தி

தமிழ்நாடு

திருப்பூரில் பா.ஜ., செயற்குழு ஜே.பி. நட்டா இன்று வருகை

Added : நவ 23, 2021
Share
Advertisement
சென்னை:திருப்பூரில் இன்று நடக்கும் தமிழக பா.ஜ., செயற்குழு கூட்டத்தில், அக்கட்சி தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்கிறார்.டில்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, இன்று மதியம் 12:30 மணிக்கு கோவை விமான நிலையம் வருகிறார். விமான நிலையத்தில், தமிழக பா.ஜ., சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.பிற்பகல் 2:30 மணிக்கு திருப்பூரில் நடக்கும் மாநில

சென்னை:திருப்பூரில் இன்று நடக்கும் தமிழக பா.ஜ., செயற்குழு கூட்டத்தில், அக்கட்சி தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்கிறார்.

டில்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, இன்று மதியம் 12:30 மணிக்கு கோவை விமான நிலையம் வருகிறார். விமான நிலையத்தில், தமிழக பா.ஜ., சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.பிற்பகல் 2:30 மணிக்கு திருப்பூரில் நடக்கும் மாநில செயற்குழு கூட்டத்தில் நட்டா பங்கேற்கிறார்.இதில், மத்திய இணை அமைச்சர் முருகன்,
தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி, தமிழக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.தமிழகத்தில் கட்சியை பலப் படுத்துவது, வரும் தேர்தல்களில் வெற்றி பெற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, கட்சியினருக்கு நட்டா முக்கிய ஆலோசனைகளை வழங்க உள்ளார்.
மாலை 4:00 மணிக்கு, திருப்பூரில் கட்டப்பட்டுள்ள வடக்கு மாவட்ட பா.ஜ., அலுவலகத்தை நட்டா திறந்து வைக்கிறார். அங்கிருந்தபடி 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக திருநெல்வேலி, ஈரோடு, வாணியம்பாடியில் கட்டப்பட்டுள்ள கட்சி அலுவலகங்களையும் திறந்து வைக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X