அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரேஷனில் ரூ.5,000 வழங்க பழனிசாமி கோரிக்கை

Updated : நவ 25, 2021 | Added : நவ 23, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை:'மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, 24 ஏக்கர் நெற்பயிருக்கு 40 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். மறு சாகுபடி செலவுக்கு 12 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலைகளையும்,
ரேஷனில் ரூ.5,000 வழங்க பழனிசாமி கோரிக்கை

சென்னை:'மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, 24 ஏக்கர் நெற்பயிருக்கு 40 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். மறு சாகுபடி செலவுக்கு 12 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலைகளையும், தக்காளி, வெங்காயம் போன்ற காய்கறிகளின் விலைகளையும், கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.
மழையால் பாதிக்கப்பட்ட, ஊரக சாலைகள் உட்பட அனைத்து சாலைகளையும், உடனடியாக சீர் செய்ய வேண்டும். மறு உழவுப் பணிகளுக்கு தேவையான விதைகள், உரங்கள் போன்றவை நியாயமான விலையில், தட்டுப்பாடின்றி கிடைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்தவிதமான நிபந்தனையுமின்றி, கடன் சங்கங்கள் வழியே, விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க் கடன் வழங்க வேண்டும். மழையால் சேதமடைந்த வீடுகள், உயிரிழந்த கால்நடை மற்றும் கோழிகளுக்கான இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும்.
மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு வாழ்வாதார உதவியாக 5,000 ரூபாய் வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


ராமதாஸ் வலியுறுத்தல்

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:கடலுார் மாவட்டத்தில் பெய்த கன மழை பாதிப்பால், தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற போர்க்கால வேகத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
இறந்து கிடக்கும் விலங்குகளை பாதுகாப்பாக, ஆழமாக பள்ளம் தோண்டி புதைக்க வேண்டும். மழை -வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும்,கொசு மருந்து தெளிக்க வேண்டும். விழுப்புரம், வேலுார், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருப்பூர், கன்னியாகுமரி உட்பட பெரும்பான்மையான மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன.மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு பற்றாக்குறையான இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில், அனைத்து குடும்பங்களுக்கும் தலா 5,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என, அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. அதேபோல தமிழகத்திலும் வழங்க அரசு முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
24-நவ-202114:53:59 IST Report Abuse
அசோக்ராஜ் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்த அரசு ஏன் வங்கிக் கணக்கு எண்ணை இணைக்கவில்லை? வெள்ள நிவாரணத்தை பணமாகக் கொடுத்தால் கணிசமாக ஆட்டை போடப்படும்.
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
24-நவ-202112:35:21 IST Report Abuse
J. G. Muthuraj இன்னொருத்தன் கொடுக்கிறதா இருந்தா 5000 என்ன 10,000 கூட சொல்லலாம்....
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
24-நவ-202112:01:02 IST Report Abuse
sankar ஆடிய ஆட்டத்திற்கு பிறகு இவருக்கு பொழுது போகவில்லை போலும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X