பிக்பாஸில் இருந்து கமல் வெளியேற்றம்?| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'பிக்பாஸில்' இருந்து கமல் வெளியேற்றம்?

Added : நவ 23, 2021
Share
சென்னை:கொரோனா தொற்று பாதித்ததால், 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் இருந்து கமல் வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல், சமீபத்தில் அமெரிக்கா சென்று வந்தார். சென்னை வந்ததும், பிக்பாஸ் 5 சீசன் மற்றும் விக்ரம் படப்பிடிப்பிலும் பங்கேற்றார். தொண்டையில் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, மருத்துவமனைக்கு சென்றபோது, பரிசோதனையில்

சென்னை:கொரோனா தொற்று பாதித்ததால், 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் இருந்து கமல் வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல், சமீபத்தில் அமெரிக்கா சென்று வந்தார். சென்னை வந்ததும், பிக்பாஸ் 5 சீசன் மற்றும் விக்ரம் படப்பிடிப்பிலும் பங்கேற்றார். தொண்டையில் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, மருத்துவமனைக்கு சென்றபோது, பரிசோதனையில் கமலுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.

இதையடுத்து போரூர், ராமச்சந்திரா மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். நடிகர் ரஜினி மொபைல் போனில், கமலை தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார். இதற்கிடையே, 'பிக்பாஸ் 5 சீசனை' தொகுத்து வழங்கி வந்த கமல், கொரோனாவால் பாதிக்கப் பட்டு உள்ளதால், நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் நிலைக்கு ஆளாகியுள்ளார்.
இதுவரை போட்டியாளர்களே வெளியேற்றப்பட்டனர். 'பிக்பாஸ்' ஆரம்பித்ததில் இருந்து ஒரு வாரம் கூட தவறாமல் பங்கேற்ற கமல், முதல் முறையாக நிகழ்ச்சியில் இருந்து விலகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அவருக்கு பதில் விஜய் சேதுபதி அல்லது கமல் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கலாம் என, தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X