அரசியல் செய்தி

தமிழ்நாடு

111 சிற்றுார்களுக்கு பரிசு ரூ.11.10 கோடி ஒதுக்கீடு

Added : நவ 23, 2021
Share
Advertisement
சென்னை:ஜாதி வேறுபாடுகளற்ற மயானங்கள் பயன்பாட்டில் உள்ள சிற்றுார்களுக்கு, 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்க, 11.10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பல கிராமங்களில், ஜாதி வேறுபாடுகளற்ற மயானங்கள் பயன்பாட்டில் உள்ளன. இறுதி பயணத்திலும் பிரிவினைகள் இருக்கக் கூடாது என்பதில், மற்றவர்களுக்கு முன் மாதிரியாக விளங்கும் சிற்றுார்களுக்கு, வளர்ச்சி பணிகளை செயல்படுத்த, அரசு

சென்னை:ஜாதி வேறுபாடுகளற்ற மயானங்கள் பயன்பாட்டில் உள்ள சிற்றுார்களுக்கு, 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்க, 11.10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல கிராமங்களில், ஜாதி வேறுபாடுகளற்ற மயானங்கள் பயன்பாட்டில் உள்ளன. இறுதி பயணத்திலும் பிரிவினைகள் இருக்கக் கூடாது என்பதில், மற்றவர்களுக்கு முன் மாதிரியாக விளங்கும் சிற்றுார்களுக்கு, வளர்ச்சி பணிகளை செயல்படுத்த, அரசு சார்பில் பரிசு தொகையாக, 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று, சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில், முதல் கட்டமாக, மாவட்டத்திற்கு மூன்று சிற்றுார்கள் வீதம், 37 மாவட்டங்களில், 111 சிற்றுார்களை தேர்வு செய்து, பரிசுத்தொகை வழங்க நிதி ஒதுக்கும்படி, ஆதிதிராவிடர் நல ஆணையர் அரசுக்கு கருத்துரு அனுப்பினார்.அதை ஏற்ற அரசு, 111 சிற்றுார்களுக்கு, தலா 10 லட்சம் ரூபாய் வழங்க, 11.10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.
சமத்துவ மயானம் அமைந்துள்ள, பயன்பாட்டில் உள்ள கிராமம் மற்றும் குக்கிராமங்களுக்கு மட்டுமே, இந்தத் தொகை வழங்கப்பட வேண்டும்.இத்தொகையில் என்ன பணிகளை செய்யலாம் என்பது குறித்து, ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அதன் அடிப்படையில், வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X