பொது செய்தி

தமிழ்நாடு

மதுக்கடையை அகற்ற கோரிக்கை

Added : நவ 23, 2021
Share
Advertisement
பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் அருகே ஜீவா ?ஷட் பகுதியில் பிரதான சாலையில் இருந்து, 100 மீட்டர் தூரத்தில் கடந்த, 19ல் புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டது. கடை வளாகத்தில பாரும் செயல்படுகிறது. மதுக்கடை திறக்கப்பட்ட நாளிலேயே அருகில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் வேதனையடைந்தனர். நேற்று, லோக் ஜன சக்தி இளைஞரணி மாநில துணை தலைவர் ஆதவன் தலைமையில் அப்பகுதி மக்கள், கலெக்டரிடம் மனு

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் அருகே ஜீவா ?ஷட் பகுதியில் பிரதான சாலையில் இருந்து, 100 மீட்டர் தூரத்தில் கடந்த, 19ல் புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டது. கடை வளாகத்தில பாரும் செயல்படுகிறது. மதுக்கடை திறக்கப்பட்ட நாளிலேயே அருகில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் வேதனையடைந்தனர். நேற்று, லோக் ஜன சக்தி இளைஞரணி மாநில துணை தலைவர் ஆதவன் தலைமையில் அப்பகுதி மக்கள், கலெக்டரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து, அவர் கூறியதாவது: குடியிருப்பு நிறைந்த பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடையால் அங்கு வசிக்கும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். உடனடியாக மூடவேண்டும் என, மனு கொடுத்தோம். மனுவை பார்த்த பிறகு தான், கலெக்டருக்கே பள்ளிபாளையத்தில் புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டது என தெரிந்தது. உடனடியாக மதுக்கடையை மூடக்கோரி, 25ம் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X