பொது செய்தி

தமிழ்நாடு

எட்டு தாலுகாக்களில் நாளை பட்டா தீர்வு முகாம்

Added : நவ 23, 2021
Share
Advertisement
நாமக்கல்: அரசு கொள்கையின் ஒரு அங்கமாக ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும், விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் புதன், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. நாளை (நவ., 24), கிராமங்களில் நடக்கும் சிறப்பு முகாம் விபரம் பின் வருமாறு: நாமக்கல் தாலுகாவில்,

நாமக்கல்: அரசு கொள்கையின் ஒரு அங்கமாக ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும், விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் புதன், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. நாளை (நவ., 24), கிராமங்களில் நடக்கும் சிறப்பு முகாம் விபரம் பின் வருமாறு: நாமக்கல் தாலுகாவில், பெரியப்பட்டி, கீழ்சாத்தம்பூர், ராமநாயக்கன்பட்டி, லக்கபுரம்; சேந்தமங்கலத்தில், பொட்டிரெட்டிப்பட்டி, நடுக்கோம்பை, எருமப்பட்டி; ராசிபுரத்தில், வடுகம், ஆர்.புதுப்பட்டி, கல்லாங்குளம், ஆயில்பட்டி. மோகனூர் தாலுகாவில், மோகனூர், வடவத்தூர், எஸ்.வாழவந்தி; திருச்செங்கோட்டில், எஸ்.இறையமங்கலம், முசிறி, பிள்ளாநத்தம், கொன்னையார், அவிநாசிப்பட்டி. ப.வேலூர் தாலுகாவில், மாணிக்கநத்தம், மணியனூர், பிலிக்கல்பாளையம், இ.நல்லாக்கவுண்டம்பாளையம்; குமாரபாளையத்தில், கலியனூர், அக்ரஹாரம், சவுதாபுரம் ஆகிய கிராமங்களில் நடக்கிறது. பொதுமக்கள் சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொண்டு, தங்களுடைய பட்டா மாறுதல் மற்றும் இதர கோரிக்கைகளை மனுவாக அளித்து தீர்வு பெறலாம். இவ்வாறு, கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X