பொது செய்தி

தமிழ்நாடு

நிலுவை சம்பளம், ஊக்க ஊதியம்: ஒப்பந்த செவிலியர்கள் கோரிக்கை

Added : நவ 23, 2021
Share
Advertisement
நாமக்கல்: 'நிலுவை சம்பளம், ஊக்க ஊதியம் வழங்கக் கோரி, கொரோனா கால ஒப்பந்த செவிலியர்கள் நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்தனர்.கொரோனா தொற்று இரண்டாம் அலை தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிக்கும் வகையில், ஒப்பந்த அடிப்படையில் தமிழகம் முழுவதும் செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர். நாமக்கல் மாவட்டத்தில், 54 செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில், நியமிக்கப்பட்டனர். வரும்,

நாமக்கல்: 'நிலுவை சம்பளம், ஊக்க ஊதியம் வழங்கக் கோரி, கொரோனா கால ஒப்பந்த செவிலியர்கள் நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்தனர்.


கொரோனா தொற்று இரண்டாம் அலை தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிக்கும் வகையில், ஒப்பந்த அடிப்படையில் தமிழகம் முழுவதும் செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர். நாமக்கல் மாவட்டத்தில், 54 செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில், நியமிக்கப்பட்டனர். வரும், 30ம் தேதியுடன் ஒப்பந்தகாலம் முடிவு பெறுகிறது. இந்நிலையில், தங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை சம்பளம் மற்றும் ஊக்க ஊதியத்தை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும் என, கலெக்டரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து, ஒப்பந்த செவிலியர்கள் சிலர் கூறியதாவது: கொரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவதற்காக நியமிக்கப்பட்டோம். எங்களுக்கு, ஒரு மாதம் மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, நான்கு மாதங்களுக்கான சம்பளம், ஊக்க ஊதியம் என, 74 ஆயிரம் ரூபாய் வழங்கவேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டால், நிதி ஒதுக்கீடு வரவில்லை எனக்கூறி காலம் தாழ்த்துகின்றனர். முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக, கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம். மீண்டும் எங்களுக்கு பணி வாய்ப்பும், நிலுவை ஊதியத்தையும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X