பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு வங்கியை விவசாயிகள் முற்றுகை

Added : நவ 23, 2021
Share
Advertisement
நாமகிரிப்பேட்டை: நகை கடன் தள்ளுபடி செய்யாததால் விவசாயிகள் ஆர். புதுப்பட்டி கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டனர். நாமகிரிப்பேட்டை அடுத்த ஆர்.புதுப்பட்டியில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில், 1,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். அ.தி.மு.க., ஆட்சியில் விவசாய கடன் மற்றும் நகைகடனை தள்ளுபடி செய்து அதற்கான ஆணை வழங்கப்பட்டது. ஆனால் கூட்டுறவு சங்க

நாமகிரிப்பேட்டை: நகை கடன் தள்ளுபடி செய்யாததால் விவசாயிகள் ஆர். புதுப்பட்டி கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டனர். நாமகிரிப்பேட்டை அடுத்த ஆர்.புதுப்பட்டியில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில், 1,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். அ.தி.மு.க., ஆட்சியில் விவசாய கடன் மற்றும் நகைகடனை தள்ளுபடி செய்து அதற்கான ஆணை வழங்கப்பட்டது. ஆனால் கூட்டுறவு சங்க அதிகாரிகள் நகையையும் வழங்காமல் கடன் தள்ளுபடி, புதிய கடன் வழங்காமல் உள்ளனர். இது குறித்து, 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கூட்டுறவு சங்க அதிகாரிகளிடம் கேட்டதற்கு, அவர்கள் அலட்சியமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்தும், தள்ளுபடியை உடனடியாக நடைமுறைப்படுத்த கோரியும் விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து செயலாளரிடம் மனு கொடுத்தனர். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தொடர்ந்து போராடுவது என விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X