ஆதரவற்றோருக்கு உணவளித்து காப்பாற்றுகிறோம்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

ஆதரவற்றோருக்கு உணவளித்து காப்பாற்றுகிறோம்!

Added : நவ 23, 2021
Share
ஆதரவற்றோருக்கு மூன்று வேலையும் உணவு வழங்கி வருவது பற்றி, கரூர், ராமகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த, 'சங்கமம்' அமைப்பை சேர்ந்த உதயகுமார்: பி.ஏ., - பி.எட்., படிச்சிருக்கேன். ஆனா, சரியா வேலை கிடைக்கலை. தற்காலிகமா தனியார் கம்பெனில வேலைக்கு போயிட்டிருக்கேன்.தினமும் வேலைக்கு போகும் போது, ஆதரவின்றி, கிழிந்த உடைகளுடன் அமர்ந்திருக்கும் ஆதரவற்றோரின் நிலையை பார்க்கும் போது கஷ்டமா
சொல்கிறார்கள்

ஆதரவற்றோருக்கு மூன்று வேலையும் உணவு வழங்கி வருவது பற்றி, கரூர், ராமகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த, 'சங்கமம்' அமைப்பை சேர்ந்த உதயகுமார்: பி.ஏ., - பி.எட்., படிச்சிருக்கேன். ஆனா, சரியா வேலை கிடைக்கலை. தற்காலிகமா தனியார் கம்பெனில வேலைக்கு போயிட்டிருக்கேன்.

தினமும் வேலைக்கு போகும் போது, ஆதரவின்றி, கிழிந்த உடைகளுடன் அமர்ந்திருக்கும் ஆதரவற்றோரின் நிலையை பார்க்கும் போது கஷ்டமா இருக்கும்.'இவங்களுக்குன்னு யாருமே இல்லையா; எங்க துாங்குவாங்க; சாப்பாடு எப்படி கிடைக்கும்...'ன்னு பல கேள்விகள் அடிமனசை அறுக்கும். அப்படி தோணும் போது 'அவங்களுக்கு ஒருவேளை சாப்பாடாவது கிடைக்க வழி பண்ணணும்'னு நினைப்பேன்.அதனால தினமும் ஒருத்தருக்கு ஒருவேளை சாப்பாடு வாங்கிக் கொடுக்க ஆரம்பித்தேன். அதைப்பார்த்த ரயில்வே ஸ்டேஷன்ல மூட்டை துாக்கும் நண்பர், 'தினமும் 10 பேருக்கு சாப்பாடு கொடுக்கலாமே'ன்னு சொன்னாரு.'அதுக்கு பணவசதி இல்லையே'ன்னு சொன்னேன். 'ஸ்பான்சர்கள்' மூலமா வறியவர்களின் பசியாற்றும் அமைப்புகளின், 'வீடியோ'க்களை காண்பிச்சப்ப தான் நம்பிக்கை வந்துச்சு.போன வருஷம் முதல், 10 பேருக்கு சாப்பாடு வாங்கிக் கொடுக்க துவங்கினோம். அதை புகைப்படம் எடுத்து, 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில் பதிவிட்டோம்.அதைப் பார்த்துட்டு பலரும் தங்கள் இல்ல விழாக்களில் ஆதரவற்றோருக்கு சாப்பாடு கொடுத்து உதவினாங்க.அதனால சிறிது காலம், 'எந்த மனிதரும், இரவு படுக்க போகும் போது, பசியுடன் இருக்கக் கூடாது'ன்னு இரவு உணவு மட்டும் கொடுத்தோம்.எங்களின் இந்த முயற்சியை பார்த்து, தினக்கூலிகளாக இருக்கும் பலரும் இணைஞ்சு, 'சங்கமம்' என்ற இந்த அமைப்பை துவங்கி, இப்போது பலருக்கு பசியாற்றி வருகிறோம். இன்னிக்கு குறைஞ்சது, 50 பேருக்கு மூணு வேளையும் சாப்பாடு கொடுத்திட்டு இருக்கோம். 'ஸ்பான்சர்' எல்லா நேரமும் கிடைக்க மாட்டாங்க; பாதி நாள் நாங்க 15 பேரும் எங்க வருமானத்துல மிச்சம் பிடிச்சு சாப்பாடு வாங்கி தருவோம்.

மனநலம் பாதிக்கப்பட்டவங்க அழுக்கான உடை அணிந்து, நிறைய முடியோட இருப்பாங்க. அவங்களுக்கு முடிவெட்டி, குளிப்பாட்டி, புது உடை அணிவிப்போம். விசேஷ நாட்கள்ல போர்வை, ஸ்வீட், பிரியாணி கொடுப்போம். அதேபோல், கிராமப்பகுதிகளில் ஆதரவில்லாமல் இருக்கும், ஒன்பது முதியோர்களுக்கு மளிகை சாமான்கள் வாங்கி தருகிறோம். இப்படி எங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகிறோம். இதில் மனநிறைவு கிடைக்கிறது. எங்களுடன் புதிது புதிதாக பலரும் இணைவது நம்பிக்கையை அளிக்கிறது!தொடர்புக்கு: 93448 88866

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X