பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவ முகாம்

Added : நவ 23, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை சார்பில், மழைக்கால சிறப்பு சித்த மருத்துவ முகாம் துவக்க விழா நடந்தது. கலெக்டர் ஸ்ரேயா சிங் முகாமை துவக்கி வைத்தார். நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீர் மற்றும் மழைக்கால நோய் தடுப்பு முறைகள், தவிர்க்க வேண்டிய உணவு பொருட்கள், சித்த மருத்துவ அறிவுரைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள்

நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை சார்பில், மழைக்கால சிறப்பு சித்த மருத்துவ முகாம் துவக்க விழா நடந்தது. கலெக்டர் ஸ்ரேயா சிங் முகாமை துவக்கி வைத்தார். நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீர் மற்றும் மழைக்கால நோய் தடுப்பு முறைகள், தவிர்க்க வேண்டிய உணவு பொருட்கள், சித்த மருத்துவ அறிவுரைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன. சளி, இருமல், ஆஸ்துமா, காய்ச்சல் ஆகிய நோய்களுக்கு கபசுரக் குடிநீர், நிலவேம்பு குடிநீர், சுவாச குடோரி மாத்திரை, கருப்பு விஷ்ணு சக்கர மாத்திரை, பிரம்மானந்த பைரவ மாத்திரை, நீர்க்கோவை மாத்திரைகள், 293 பேருக்கு, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வழங்கப்பட்டது. தொடர்ந்து, மழைக்கால சிறப்பு சித்த மருத்துவ முகாம் வாகனங்களை, கலெக்டர் ஸ்ரேயா சிங் துவக்கி வைத்தார். நடமாடும் சித்த மருத்துவ முகாம் வாகனங்கள் மூலம், ஒவ்வொரு வட்டாரந் தோறும், வாரத்துக்கு, இரண்டு முகாம்கள் வீதம் நடத்தப்பட உள்ளது. எர்ணாபுரம் ஊராட்சி துவக்கப்பள்ளியில் நடந்த மழைக்கால சிறப்பு சித்த மருத்துவ முகாமில், 150க்கும் மேற்பட்ட பொதுமக்கள், சிகிச்சை பெற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X