மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உபகரணம் வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உபகரணம் வழங்கல்

Added : நவ 23, 2021
Share
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் உள்ளடங்கிய கல்வி திட்டத்தின் கீழ், புதுச்சத்திரம் வட்டார வளமையத்தில், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான, உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. புதுச்சத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியர் குப்புசாமி தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் கோபாலகிருஷ்ணமூர்த்தி, மேற்பார்வையாளர் (பொ)

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் உள்ளடங்கிய கல்வி திட்டத்தின் கீழ், புதுச்சத்திரம் வட்டார வளமையத்தில், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான, உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. புதுச்சத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியர் குப்புசாமி தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் கோபாலகிருஷ்ணமூர்த்தி, மேற்பார்வையாளர் (பொ) மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், 41 பேருக்கு நடை பயிற்சி கருவி, மூளைமுடக்குவாத நாற்காலி, மனவளர்ச்சி மாணவர்களுக்கான பயிற்சி பெட்டகம் ஆகிய, 69 உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்த உபகரணங்களை பயன்படுத்தும் முறை குறித்து, சிறப்பு பயிற்றுனர் மற்றும் இயன்முறை பயிற்றுனர்கள் மூலம், பெற்றோருக்கு பயிற்சியளிக்கப்பட்டது. வட்டார ஒருங்கிணைப்பாளர் செல்வராணி, ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

* சேந்தமங்கலம் வட்டார வளமையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் முத்துசாமி தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் செல்வி, மேற்பார்வையாளர் (பொ) சரஸ்வதி ஆகியோர் பங்கேற்றனர். எட்டு பேருக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன. வட்டார ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வி, ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X