பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி வகுப்பறைக்கு கட்டடம் தேவை: மாணவர்களின் பெற்றோர் மனு

Added : நவ 23, 2021
Share
Advertisement
நாமக்கல்: 'போதிய வகுப்பறை கட்டடம் இல்லாததால், மாணவர்கள், மரத்தடியிலும், கலையரங்கிலும் அமர்ந்து படிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதனால், கூடுதல் வகுப்பறை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, எஸ்.வாழவந்தி அரசு உயர்நிலைப்பள்ளி பி.டி.ஏ., தலைவர் மருதவீரன் தலைமையில், பெற்றோர், நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: மோகனூர் ஒன்றியம்

நாமக்கல்: 'போதிய வகுப்பறை கட்டடம் இல்லாததால், மாணவர்கள், மரத்தடியிலும், கலையரங்கிலும் அமர்ந்து படிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதனால், கூடுதல் வகுப்பறை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, எஸ்.வாழவந்தி அரசு உயர்நிலைப்பள்ளி பி.டி.ஏ., தலைவர் மருதவீரன் தலைமையில், பெற்றோர், நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: மோகனூர் ஒன்றியம் எஸ்.வாழவந்தி அரசு உயர்நிலைப்பள்ளியில், 177 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். போதிய வகுப்பறைகள் இல்லாததால், அருகில் உள்ள கலையரங்கிலும், மரத்தடியிலும் மாணவர்கள் அமர்ந்து படிக்கும் அவல நிலை நீடிக்கிறது. இடம் வாங்கிக் கொடுத்தால் கட்டடம் கட்டித்தருவதாக பள்ளிக்கல்வித்துறையினர் தெரிவித்தனர். பள்ளிக்கு அருகில், 30 சென்ட் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அந்த இடத்தை அளவீடு செய்து பள்ளிக்கல்வித்துறைக்கு ஒப்படைக்க வேண்டும் என, தாசில்தாரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. 'பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், கலெக்டருக்கு கடிதம் வைத்து, அவர் எங்களுக்கு பரிந்துரைத்தால் மட்டுமே நாங்கள் அளவீடு செய்யமுடியும்' என, தாசில்தார் தெரிவித்துவிட்டார். கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X