மாணவர் சங்கம் கலெக்டரிடம் மனு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர் சங்கம் கலெக்டரிடம் மனு

Added : நவ 23, 2021
Share
கரூர்: 'கல்வி நிலையங்களில் தொடரும் பாலியல் துன்புறுத்தலை தடுக்க நடவடிக்கை தேவை' என, இந்திய மாணவர்கள் சங்கத்தினர், கரூர் கலெக்டர் அலுவலக பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: கடந்த வாரத்தில் மட்டும் கரூர், திண்டுக்கல், கோவை ஆகிய மாவட்டங்களில் கல்வி நிலையங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு மாணவியர் ஆளாகியுள்ளனர். மாணவியரின்

கரூர்: 'கல்வி நிலையங்களில் தொடரும் பாலியல் துன்புறுத்தலை தடுக்க நடவடிக்கை தேவை' என, இந்திய மாணவர்கள் சங்கத்தினர், கரூர் கலெக்டர் அலுவலக பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: கடந்த வாரத்தில் மட்டும் கரூர், திண்டுக்கல், கோவை ஆகிய மாவட்டங்களில் கல்வி நிலையங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு மாணவியர் ஆளாகியுள்ளனர். மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மாணவியின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X