பொது செய்தி

தமிழ்நாடு

பயிர் காப்பீடு கோரி விவசாயிகள் மனு

Added : நவ 23, 2021
Share
Advertisement
கரூர்: 'பயிர் காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும்' என, கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர் கூட்டத்தில், நங்கவரம் விவசாயிகள் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: தோகைமலை ஒன்றியம் நங்கவரம் பிர்காவில் நெல் பயிருக்கு, 2020-21ம் ஆண்டு காப்பீடு செய்யப்பட்டது. மழை காரணமாக பயிர் சேதமடைந்தது. குளித்தலை ஒன்றியத்தைச் சேர்ந்த கிராமங்களுக்கு மட்டும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

கரூர்: 'பயிர் காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும்' என, கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர் கூட்டத்தில், நங்கவரம் விவசாயிகள் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: தோகைமலை ஒன்றியம் நங்கவரம் பிர்காவில் நெல் பயிருக்கு, 2020-21ம் ஆண்டு காப்பீடு செய்யப்பட்டது. மழை காரணமாக பயிர் சேதமடைந்தது. குளித்தலை ஒன்றியத்தைச் சேர்ந்த கிராமங்களுக்கு மட்டும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. நங்கவரம் பிர்காவில் இழப்பீடு அளிக்கவில்லை. இங்கு பாதிப்பு ஏற்பட்ட போது, அமைச்சர், கலெக்டர், வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தொடர்ந்து பயிர் சேதம் குறித்து கணக்கீடு செய்து இதுவரை இழப்பீடு கிடைக்கவில்லை. உடனடியாக இழப்பீடு கிடைக்க ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X