பொது செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்து விதி மீறினால் அபராதம்; கரூரில் நவீன கேமராக்கள் அமைப்பு

Added : நவ 23, 2021
Share
Advertisement
கரூர்: கரூரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு நேரிடையாக அபராதம் விதிக்கும் வகையில், நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நாட்டில் சாலை விபத்து மூலம் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கும் வகையில், சாலை பாதுகாப்பு வார விழா, விழிப்புணர்வு பேரணி, கலை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. சாலை விதிமுறைகளை மீறுவோர் மீது போக்குவரத்து போலீசார்

கரூர்: கரூரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு நேரிடையாக அபராதம் விதிக்கும் வகையில், நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நாட்டில் சாலை விபத்து மூலம் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கும் வகையில், சாலை பாதுகாப்பு வார விழா, விழிப்புணர்வு பேரணி, கலை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. சாலை விதிமுறைகளை மீறுவோர் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கின்றனர். ஆனால், பொதுமக்கள் சிலர், போக்குவரத்து போலீசாரை பார்த்ததும், வாகனங்களை நிறுத்தாமல் செல்வதும், அதன் மூலமும் விபத்துகள் ஏற்படுவதும் தொடர் கதையாக உள்ளது. இதனால் நவீன கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு, மொபைல் போன் மூலம் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கரூர் நகரப் பகுதிகளான மனோகரா கார்னர், திருமாநிலையூர், சர்ச் கார்னர், லைட் ஹவுஸ் கார்னர் ஆகிய நான்கு பகுதிகளில், தலா, 12 லட்ச ரூபாய் செலவில், 48 லட்ச ரூபாய் மதிப்பில் கேமராக்கள் பொருத்தும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது.


இதுகுறித்து, போக்குவரத்து போலீசார் கூறியதாவது: வாகனங்களில் சிக்னல் பகுதியில் நிற்காமல் செல்கிறவர்கள், ?ஹல்மெட் அணியாதவர்கள், டூ வீலரில் மூன்று பேர் செல்லும் போதும் நவீன கேமராக்கள் படம் எடுத்து டில்லியில் உள்ள தலைமையிடத்துக்கு அனுப்பி விடும். பிறகு, சம்பந்தப்பட்டவர்களின் மொபைல் எண்ணுக்கு, அபராதம் தொகை விபரம் சென்று விடும். இந்த கேமராக்கள் செயல்பாட்டுக்கு வரும் போது, போக்கு வரத்து போலீசாரிடம் சிபாரிசுகள் போன்ற விஷயங்கள் எடுபடாது. விரைவில் கரூர் நகரில் நவீன கேமராக்கள் செயல்பாடு தொடங்க உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X