பொது செய்தி

தமிழ்நாடு

நாளை முதல் 3 நாட்களுக்கு கன மழை 15 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

Updated : நவ 24, 2021 | Added : நவ 23, 2021
Share
Advertisement
சென்னை :'வங்கக்கடலில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால், சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு கன மழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் அளித்த பேட்டி:வங்கக்கடலின் தெற்கு பகுதியில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது, காற்றழுத்த தாழ்வு
  ,3 நாட்களுக்கு கன மழை 15 மாவட்டங்கள், எச்சரிக்கை

சென்னை :'வங்கக்கடலில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால், சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு கன மழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் அளித்த பேட்டி:வங்கக்கடலின் தெற்கு பகுதியில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது, காற்றழுத்த தாழ்வு பகுதியாக இன்று மாறுகிறது. இந்த பகுதியானது, மேற்கு மற்றும் வடமேற்கு திசையில், தமிழக கடற்கரை மற்றும் இலங்கை கடற்பகுதியை நோக்கி நகரும். இதன் காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் கன மழைபெய்யும். கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்யும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாற வாய்ப்பில்லை. ஆனால், காற்றும், கனமழையும் இருக்கும். இந்த பருவ மழை காலத்தில் உருவாகும், நான்காவது காற்றழுத்த தாழ்வாகவும், நவம்பர் மாதத்தில் உருவாகும் மூன்றாவது தாழ்வு பகுதியாகவும் இது உள்ளது.



சென்னைக்கு 'அலெர்ட்'



காற்றழுத்த தாழ்வு காரணமாக, திருநெல்வேலி, ராமநாதபுரம், துாத்துக்குடி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில், இன்று கன மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில், மிதமான மழை பெய்யும். சென்னையில் இன்று பல இடங்களில் மிதமான மழை பெய்யும்.

நாளை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் மிக கன மழை பெய்யும். சென்னை, ராமநாதபரம், திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழையும், மற்ற இடங்களில் மிதமான மழையும் பெய்யும்.வரும் 26, 27ம் தேதிகளில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும். விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் கன மழை பெய்யும்.


மீனவர்கள் உஷார்



தமிழக மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில், மணிக்கு 60 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, 26, 27ம் தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். நேற்று காலை நிலவரப்படி 24 மணி நேரத்தில், மாநிலத்தில் அதிகபட்சமாக, சென்னை செங்குன்றம், சோழவரம், நீலகிரி பந்தலுாரில், 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X