பொது செய்தி

தமிழ்நாடு

கரூர் மாவட்டத்தில் மீண்டும் மழை; மாயனூருக்கு நீர் வரத்து குறைவு

Added : நவ 23, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் மாவட்டத்தில் நேற்று மதியம் முதல், மீண்டும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவு நேற்று குறைந்தது.தமிழகம் முழுவதும் கடந்த, 2 முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் கடந்த, 20 வரை நாள்தோறும் மழை பெய்தது. ஆனால், கடந்த இரண்டு நாட்களாக மழை குறைந்தது. இந்நிலையில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு

கரூர்: கரூர் மாவட்டத்தில் நேற்று மதியம் முதல், மீண்டும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவு நேற்று குறைந்தது.


தமிழகம் முழுவதும் கடந்த, 2 முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் கடந்த, 20 வரை நாள்தோறும் மழை பெய்தது. ஆனால், கடந்த இரண்டு நாட்களாக மழை குறைந்தது. இந்நிலையில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. நேற்று மாலை, 4:00 மணி முதல் கரூர் நகரம், திருமாநிலையூர், வெங்கமேடு, பசுபதிபாளையம், வெண்ணைமலை, காந்தி கிராமம், தான்தோன்றிமலை, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை சிறிது நேரம் பெய்தது. கரூர் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விபரம் (மி.மீ.,): க.பரமத்தி, 1, பஞ்சப்பட்டி, 2.6, மயிலம்பட்டி, 3 ஆகிய அளவுகளில் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 0.55 மி.மீ., மழை பதிவாகியுள்ளது

மாயனூர் கதவணை நிலவரம்: கரூர் அருகே மாயனூர் கதவணைக்கு நேற்று முன்தினம் காலை, 69 ஆயிரத்து, 910 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, 66 ஆயிரத்து, 322 கன அடியாக வரத்து குறைந்தது. அந்த தண்ணீர் முழுவதும் காவிரியாற்றில் சம்பா சாகுபடி பணிக்காக திறக்கப்பட்டது. மழை காரணமாக நான்கு பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

அமராவதி அணை நிலவரம்: திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு நேற்று முன்தினம், 1,009 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி, 542 கன அடியாக வரத்து குறைந்தது. இதனால், அமராவதி ஆற்றில், 400 கன அடி தண்ணீரும், புதிய பாசன வாய்க்காலில், 188 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 88.03 அடியாக இருந்தது. மழை காரணமாக, கரூர் அருகே பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, 1,822 கன அடி தண்ணீர் வந்தது.

ஆத்துப்பாளையம் அணை நிலவரம்: க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, 50 கன அடி தண்ணீர் வந்தது. நொய்யல் வாய்க்காலில், 15 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 25.91 அடியாக இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X