ஆறுமுகசாமி கமிஷனை விரிவுபடுத்த உச்ச நீதிமன்றம் ஆலோசனை

Updated : நவ 25, 2021 | Added : நவ 23, 2021 | கருத்துகள் (12+ 31)
Share
Advertisement
புதுடில்லி : 'தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுக சாமி கமிஷனில், தொழில்நுட்ப நிபுணர் அல்லது டாக்டர் மற்றும் முன்னாள் நீதிபதி ஒருவரை சேர்க்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தபோது, 2016 செப்.,ல் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, சென்னை அப்பல்லோ
ஆறுமுகசாமி கமிஷன், விரிவுபடுத்த உச்ச நீதிமன்றம் ஆலோசனை

புதுடில்லி : 'தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுக சாமி கமிஷனில், தொழில்நுட்ப நிபுணர் அல்லது டாக்டர் மற்றும் முன்னாள் நீதிபதி ஒருவரை சேர்க்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.
அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தபோது, 2016 செப்.,ல் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனளிக்காமல், அந்தாண்டு, டிச., 5ல் உயிரிழந்தார்.அவருடைய மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த புகார் தொடர்பாக விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது.

இந்த விசாரணைக் குழுவின் விசாரணையை எதிர்த்து, அப்பல்லோ மருத்துவமனை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இந்த வழக்கு நீதிபதிகள் எஸ். அப்துல் நசீர், கிருஷ்ணா முராரி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.


அப்போது, அப்பல்லோ மருத்துவமனை சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் சி.ஏ. சுந்தரம், 'ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை உள்ளிட்டவைகள் குறித்து புரிந்து கொள்ளும் வகையில், விசாரணைக் குழுவில் எவரும் இல்லை.'இந்த விசாரணைக் குழு எங்களுக்கு எதிராக பாரபட்சமாக நடக்கிறது. அதனால், இந்த விசாரணைக் கமிஷன் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்' என, வாதிட்டார்.
அதையடுத்து, 'விசாரணை கமிஷனில், ஒரு தொழில்நுட்ப நிபுணர் அல்லது டாக்டர் மற்றும் ஒரு முன்னாள் நீதிபதியை ஏன் கூடுதலாக சேர்க்கக் கூடாது' என, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தாவேயிடம், அமர்வு கேள்வி எழுப்பியது.'தற்போதைய சூழ்நிலையில், இந்த விசாரணைக் கமிஷனில் இணைவதற்கு நிபுணர் அல்லது டாக்டர் யாரும் முன்வர மாட்டர். அதே நேரத்தில் விசாரணைகமிஷனை விரிவுபடுத்த தமிழக அரசு தயாராக உள்ளது' என, துஷ்யந்த் தவே கூறியுள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (12+ 31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
24-நவ-202123:13:09 IST Report Abuse
sankaseshan கல்கி கிருஷ்ணமுர்த்தி சொல்லுவார் பிரச்னையை முடிக்க வேண்டுமா அதன் தலை மேல் விசாரணைகமிஷன் என்ற பாறையை தூக்கி போடு முடிந்துவிடும் என்று
Rate this:
Cancel
Dr SS - Chennai,இந்தியா
24-நவ-202122:56:29 IST Report Abuse
Dr SS மருத்துவத்தில் தவறா அல்லது சரியா என்று அணுகுவது எந்தவித விடையையும் கொடுக்காது. காரணம் மருத்துவர்கள் இடையே எழுதப்படாத ஒற்றுமை உண்டு. மருத்துவரை நியமித்தால் அவர் அனேகமாக வரமாட்டார்.
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
24-நவ-202117:18:32 IST Report Abuse
DVRR பேஷ் பேஷ் இன்னும் "இழுக்க இழுக்க இன்பம் இறுதி வரை" என்று இந்த கேசில் செய்யலாம் என்ற எண்ணம் அதாவது retire ஆன நீதிபதிக்கு இப்போது வருமானம் கிடைக்கும் அப்படித்தானே உச்சா போகும் நீதிமன்றமே ???ஒரு வழக்கு எவ்வளுவு நாளில் தீர்ப்பு என்று தெரியாமல் வருடக்கணக்கில் இழுப்பது போல் இந்த கமிஷனையும் இழுக்க நல்ல ஆணை இது உன்னிடமிருந்து. நாடு வெளங்கிடும் இந்த மாதிரி உச்ச நீதிமன்றம் இருந்தால்??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X