முருங்கை விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முருங்கை விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம்

Added : நவ 23, 2021
Share
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில் தமிழ்நாடு வேளாண் பல்கலை, கோவை வேளாண்மை மற்றும் ஊரக மேலாண்மை துறை சார்பில் முருங்கை விவசாயிகளுக்கான கலந்தாய்வு ஆலோசனை கூட்டம் நடந்தது. 'ஆத்ம நிர்பார் பாரத் அபியான்' திட்டத்தின் கீழ், உணவு பதப்படுத்தும் குழு நிறுவனங்களுக்கான நெறிப்படுத்தும் திட்டத்தின் கீழ், முருங்கை விவசாயிகளை புதிய ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்ய

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில் தமிழ்நாடு வேளாண் பல்கலை, கோவை வேளாண்மை மற்றும் ஊரக மேலாண்மை துறை சார்பில் முருங்கை விவசாயிகளுக்கான கலந்தாய்வு ஆலோசனை கூட்டம் நடந்தது. 'ஆத்ம நிர்பார் பாரத் அபியான்' திட்டத்தின் கீழ், உணவு பதப்படுத்தும் குழு நிறுவனங்களுக்கான நெறிப்படுத்தும் திட்டத்தின் கீழ், முருங்கை விவசாயிகளை புதிய ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்ய ஊக்குவிக்கும் பொருட்டு ஆலோசனை வழங்கப்பட்டது. முருங்கை விதை, முருங்கை பொடி, முருங்கை பயிரிடுதல் போன்ற முருங்கைகாய் சம்பந்தமான ஆலோசனைகளை வேளாண் விஞ்ஞானிகள் வழங்கினர். முருங்கை விவசாயத்திற்கு தேவையான வங்கிக் கடன் பற்றிய விளக்கங்களையும் எடுத்துக் கூறினர். இந்நிகழ்வில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். மேலும் இக்கூட்டத்தில் கோவை வேளாண் பல்கலை சார்பில் தலைவர் மற்றும் பேராசிரியர் வெங்கடேச பழனிசாமி, வேளாண் விரிவாக்கம் மற்றும் ஊரக சமூகவியல் பேராசிரியர்கள் கார்த்திகேயன், ரோகிணி உள்ளிட்ட வேளாண் துறை சேர்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X