உரிய அதிகாரங்களை வழங்க பஞ்., தலைவர் கூட்டமைப்பு மனு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உரிய அதிகாரங்களை வழங்க பஞ்., தலைவர் கூட்டமைப்பு மனு

Added : நவ 23, 2021
Share
கரூர்: 'தலைவர்களுக்கு உரிய அதிகாரங்களை வழங்க வேண்டும்' என, பஞ்., தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில், கரூர் கலெக்டர் அலுவலக பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டத்தில் பஞ்., தலைவர்களுக்கு உரிய அதிகாரங்களை வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்கள் மாத ஊதியம், பஞ்., மூலம் வழங்க வேண்டும். மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர்

கரூர்: 'தலைவர்களுக்கு உரிய அதிகாரங்களை வழங்க வேண்டும்' என, பஞ்., தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில், கரூர் கலெக்டர் அலுவலக பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டத்தில் பஞ்., தலைவர்களுக்கு உரிய அதிகாரங்களை வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்கள் மாத ஊதியம், பஞ்., மூலம் வழங்க வேண்டும். மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர் பணியிடங்கள் காலியாக உள்ளதை நிரப்ப வேண்டும். குடிநீர் பிரச்னை மற்றும் சுகாதார செலவினங்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் வகையில் நிதிகளை வழங்க வேண்டும். பஞ்., மின் கட்டணம் நிலுவை தொகை அதிகம் உள்ளதால், அதனை அரசு ஏற்று கொள்ள வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X