பொது செய்தி

தமிழ்நாடு

பாலாறு குடிநீர் நிறுத்தம்; தாம்பரம் மக்கள் தவிப்பு

Added : நவ 23, 2021
Share
Advertisement
தாம்பரம் : தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட தாம்பரம் குடியிருப்பு பகுதியில் வழங்கப்படும் பாலாறு குடிநீர் மூன்று நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது.தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு மற்றும் மேற்கு தாம்பரம் பகுதிகளில், பாலாறு குடிநீர் திட்டம் வாயிலாக இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.இந்நிலையில், வடகிழக்கு பருவ மழையால்,

தாம்பரம் : தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட தாம்பரம் குடியிருப்பு பகுதியில் வழங்கப்படும் பாலாறு குடிநீர் மூன்று நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது.

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு மற்றும் மேற்கு தாம்பரம் பகுதிகளில், பாலாறு குடிநீர் திட்டம் வாயிலாக இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.இந்நிலையில், வடகிழக்கு பருவ மழையால், பாலாற்றில் வரலாறு காணாத வகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், தாம்பரம் பகுதிக்கு குடிநீர் வழங்கும் குடிநீர் இணைப்புகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.தண்ணீர் முழுதும் மண் படிமங்களாகவும், கலங்களாகவும் இருப்பதால் குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது.

அதனால், தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம், தாம்பரம் பகுதிக்கு உட்பட்ட கிழக்கு, மேற்கு தாம்பரம் பகுதிகளில் பாலாறு குடிநீர் வினியோகத்தை தற்காலிகமாக நிறுத்தி உள்ளது.குடிநீர் வினியோகத்தில் உள்ள பிரச்னைக்கு தீர்வு கண்டு, விரைவில் பாலாறு குடிநீர் வினியோகத்தை மீண்டும் தொடர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X