பொது செய்தி

தமிழ்நாடு

கை கொடுக்கும் வாழை :விவசாயிகளுக்கு வருவாய்

Added : நவ 23, 2021
Share
Advertisement
மடத்துக்குளம்:மடத்துக்குளம் பகுதியில், விவசாயிகளுக்கு பலவகையில் வருவாய் கொடுக்கும் வாழை சாகுபடி பரவலாக நடந்துள்ளது.இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:வாழை சாகுபடி ஒரு ஆண்டு பயிர். இதில் பழங்கள் பெறுவதற்கு சாகுபடி பருவம் முழுவதும் காத்திருக்க வேண்டும்.ஆனால், வாழை இலை விற்பனையை அடிப்படையாகக்கொண்டு சாகுபடி செய்யும் பொழுது, நடவு செய்த ஐந்து மாதங்களில் வாழை
 கை கொடுக்கும் வாழை :விவசாயிகளுக்கு வருவாய்

மடத்துக்குளம்:மடத்துக்குளம் பகுதியில், விவசாயிகளுக்கு பலவகையில் வருவாய் கொடுக்கும் வாழை சாகுபடி பரவலாக நடந்துள்ளது.இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:வாழை சாகுபடி ஒரு ஆண்டு பயிர். இதில் பழங்கள் பெறுவதற்கு சாகுபடி பருவம் முழுவதும் காத்திருக்க வேண்டும்.ஆனால், வாழை இலை விற்பனையை அடிப்படையாகக்கொண்டு சாகுபடி செய்யும் பொழுது, நடவு செய்த ஐந்து மாதங்களில் வாழை இலைகள்உற்பத்தியாகும்.இந்த காலகட்டத்திலிருந்து இலை அறுவடை செய்யத்தொடங்கலாம். ஒரு ஏக்கர் பரப்பில் அதிகப்பட்சமாக, 1,500 வாழை நடவு செய்யலாம். இந்த சாகுபடி பரப்பிலிருந்து தினமும், ஆயிரம் இலைகள் வரை அறுவடை செய்ய முடியும்.பழத்துக்கான சாகுபடியில், பூவன், கற்பூரவள்ளி, மொந்தன், கதலி, சக்கை, வயல் உள்ளிட்ட பலவகையான பழங்களை கொடுக்கும் வாழைகள் உள்ளன.இவை சாகுபடி செய்தால், ஒரு ஆண்டுக்குப்பின் உற்பத்தியாகும் பழங்களை தினசரி மார்க்கெட், கடைகள், சந்தைகளில் விற்பனை செய்வதோடு, அருகிலுள்ள மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கும் மொத்தமாக கொள்முதல் செய்து எடுத்துச்செல்லப்படுகிறது.இப்படி, பல வகையில் விவசாயிகளுக்கு, வருவாய் தரக்கூடிய சாகுபடியாக வாழை உள்ளது.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X