பொது செய்தி

தமிழ்நாடு

இயற்கை மருத்துவம் ஏராளம்: மாணவிகளுக்கு விழிப்புணர்வு

Added : நவ 23, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அரசு மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை மருத்துவம் சார்பில், இயற்கை மருத்துவ தினம், பொள்ளாச்சி மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் சொர்ணமணி தலைமை வகித்தார். ஆசிரியர் காந்திமதி வரவேற்றார்.இயற்கை மருத்துவம் பிரிவு டாக்டர் அர்ச்சனா, இயற்கை மருத்துவ தினம் கொண்டாடுவதன் அவசியம் குறித்து விளக்கி பேசினார். இயற்கை
 இயற்கை மருத்துவம் ஏராளம்: மாணவிகளுக்கு விழிப்புணர்வு

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அரசு மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை மருத்துவம் சார்பில், இயற்கை மருத்துவ தினம், பொள்ளாச்சி மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் சொர்ணமணி தலைமை வகித்தார். ஆசிரியர் காந்திமதி வரவேற்றார்.இயற்கை மருத்துவம் பிரிவு டாக்டர் அர்ச்சனா, இயற்கை மருத்துவ தினம் கொண்டாடுவதன் அவசியம் குறித்து விளக்கி பேசினார். இயற்கை மருத்துவமுறை, வாழ்க்கை முறை அதன் முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடம் தெரிவித்தார்.மூட்டுவலி, உடல் பருமன், கழுத்து மற்றும் முழங்கால்வலி, ஒவ்வாமை, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் அனைத்தும், யோகா மற்றும் இயற்கை மருத்துவ துறையில் சிகிச்சை அளிக்கப்படுகின்றன. அரசு மருத்துவமனையில், நீராவி குளியல், பேஷியல் ஸ்டீமர், ஆயில் டீரீட்மென்ட் உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைகள் குறித்து தெரிவித்தார்.மாணவிகளுக்கு, உணவு மற்றும் உடற்பயிற்சி முக்கியத்துவம், ரத்த சோகை பாதிப்புக்கு கறிவேப்பிலை பொடி, நெல்லிக்காய் பொடி, முருங்கைகாய் பொட்டி தேன் அடங்கிய ஆரோக்கிய பெட்டகம் வழங்கப்பட்டது.தெரபிஸ்ட் தங்கதுரை மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். இதேபோன்று, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், இயற்கை மருத்துவ தினம் கொண்டாடப்பட்டது. டாக்டர் சுரேஷ்ஜோசப் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X