வேளச்சேரி தண்டீஸ்வரன் நகரில் மழை நீருடன் கழிவு நீர் கலப்பு

Added : நவ 23, 2021
Share
Advertisement
அடையாறு மண்டலம், 179வது வார்டு, வேளச்சேரி, தண்டீஸ்வரன்நகரில் 10க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. வேளச்சேரி பிரதான சாலை அருகில் தேரடி தெரு உள்ளது.அங்கு, மழை நீருடன் கழிவு நீர் கலந்து வெளியேறி, வேளச்சேரி பிரதான சாலை வழியாக, தண்டீஸ்வரன் நகருக்கு செல்கிறது.இதனால், தண்டீஸ்வரன் நகரில் உள்ள, மூன்று தெருக்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. அதனுடன், அங்குள்ள கழிவு நீரும் கலந்துள்ளதால்,

அடையாறு மண்டலம், 179வது வார்டு, வேளச்சேரி, தண்டீஸ்வரன்நகரில் 10க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. வேளச்சேரி பிரதான சாலை அருகில் தேரடி தெரு உள்ளது.அங்கு, மழை நீருடன் கழிவு நீர் கலந்து வெளியேறி, வேளச்சேரி பிரதான சாலை வழியாக, தண்டீஸ்வரன் நகருக்கு செல்கிறது.

இதனால், தண்டீஸ்வரன் நகரில் உள்ள, மூன்று தெருக்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. அதனுடன், அங்குள்ள கழிவு நீரும் கலந்துள்ளதால், தெருவில் துர்நாற்றம் வீசுகிறது.தேரடி தெருவில் தேங்கும் மழை நீரை, தண்டீஸ்வரன்நகரில் வடியாத வகையில், வேளச்சேரி பிரதான சாலையில் வடிகால் கட்ட, மூன்று ஆண்டுகளாக மாநகராட்சிக்கு கோரிக்கை வைக்கிறோம்.அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், மழை நின்றும், தண்டீஸ்வரன் நகரில் கழிவு நீருடன் மழை நீர் தேங்குவதால், தொற்று நோய் பரவும் அச்சம் உள்ளது. அதிகாரிகள், தெருக்களை ஆய்வு செய்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X