பொது செய்தி

தமிழ்நாடு

மழை நீர் கட்டமைப்பு இல்லாததால் நசரத்பேட்டை குடியிருப்புகளில் வெள்ளம்

Added : நவ 23, 2021
Share
Advertisement
பூந்தமல்லி : நசரத்பேட்டை, யமுனா நகரில், குடியிருப்புகளில் வெள்ளம் தேங்குவதை தடுக்க, மழை நீர் கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை, யமுனா நகரில், 200க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. தொடர் கன மழையால் இப்பகுதியில் இடுப்பளவிற்கு வெள்ளம் தேங்கியது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால், மக்களின்
 மழை நீர் கட்டமைப்பு இல்லாததால் நசரத்பேட்டை குடியிருப்புகளில் வெள்ளம்

பூந்தமல்லி : நசரத்பேட்டை, யமுனா நகரில், குடியிருப்புகளில் வெள்ளம் தேங்குவதை தடுக்க, மழை நீர் கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

.பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை, யமுனா நகரில், 200க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. தொடர் கன மழையால் இப்பகுதியில் இடுப்பளவிற்கு வெள்ளம் தேங்கியது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. மக்கள் வெளியே வரமுடியாமல் வீடுகளிலேயே முடங்கினர். அதிகாரிகள் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தி அடைந்தனர். பின், வழியின்றி பொதுமக்களே கிடைத்த பொருட்களை படகாக மாற்றி, வெளியே சென்று வந்தனர்.தற்போது, மழை நின்றுள்ளதால், தேங்கிய வெள்ளம் மெதுவாக வடிந்து வருகிறது. மற்றொரு புறம், மோட்டார்கள் வாயிலாக மழைநீரை அகற்றும் பணியும் நடந்து வருகிறது.வெள்ளம் முழுமையாக வடிய, இன்னும் பல நாட்கள் ஆகும் என்பதால், அப்பகுதி மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

ஒவ்வொரு மழைக்கும், இப்பிரச்னை ஏற்படுவதற்கு, யமுனா நகரில், போதிய கட்டமைப்புகள் இல்லாததே காரணமாகும்.எனவே, இனியாவது, இப்பிரச்னையில் தலையிட்டு, குடியிருப்புகளை சுற்றி வெள்ளம் தேங்காமல் இருக்க, முழுமையாக ஆய்வு செய்து, மழை நீர் கால்வாய் கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X