பொது செய்தி

தமிழ்நாடு

தென்பெண்ணையாற்று கரைகள் பலப்படுத்தும் பணி துவங்கியது... பாதிப்புகளுக்கு பிறகு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை

Added : நவ 23, 2021
Share
Advertisement
கடலுார் : 'கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்' என்ற கதையாக, உடைப்பு ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்ட பிறகு, கடலுார் தென்பெண்ணையாற்று கரைகள் சீரமைப்பு பணிகள் துவங்கியுள்ளது.வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், தென்பெண்ணையாற்று நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கெலவரப்பள்ளி, கே.ஆர்.பி., அணை, திருக்கோவிலுார் அணைக்கட்டுகள் நிரம்பி, கடந்த 19ம் தேதி அதிகாலை
தென்பெண்ணையாற்று கரைகள் பலப்படுத்தும் பணி  துவங்கியது...  பாதிப்புகளுக்கு பிறகு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை

கடலுார் : 'கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்' என்ற கதையாக, உடைப்பு ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்ட பிறகு, கடலுார் தென்பெண்ணையாற்று கரைகள் சீரமைப்பு பணிகள் துவங்கியுள்ளது.

வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், தென்பெண்ணையாற்று நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கெலவரப்பள்ளி, கே.ஆர்.பி., அணை, திருக்கோவிலுார் அணைக்கட்டுகள் நிரம்பி, கடந்த 19ம் தேதி அதிகாலை 1.10 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.தென்பெண்ணையாற்றில் தண்ணீர் ஓடிய நிலையில், ஒரே நேரத்தில் 1.50 லட்சம் கன அடி தண்ணீர் கரைபுரண்டு வந்தது. 50 ஆண்டுகளுக்கு பின் கரை புரண்ட வெள்ளம் கடலுார் மாவட்டம் பண்ருட்டி, கண்டரக்கோட்டை, மேல்பட்டாம்பாக்கம், மருதாடு, சாவடி, ஆல்பேட்டை வழியாக கடலுார் நோக்கி பாய்ந்தது.

ஏற்கனவே, ஆற்றின் கரைகள் பலப்படுத்தாமல் இருந்ததாலும், ஆற்றின் நடுப்பகுதிகள் பல இடங்களில் புதர்கள் மண்டி, துார் வாரப்படாததாலும், தண்ணீர் செல்ல முடியாமல், கரைகள் உடைத்து வயல்வெளிகள், நகர் பகுதிகள், கிராமங்களில் புகுந்தது.இதனால் கடலுார் செம்மண்டலம், மருதாடு, அழகியநத்தம், தாழங்குடா, குண்டு உப்பலவாடி, உச்சிமேடு, நாணமேடு, நெல்லிக்குப்பம், விஸ்வநாதபுரம், அண்ணாகிராமம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் கரைகள் சேதமாகின. கடலுார் கஸ்டம்ஸ் சாலைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்தது. இதனால், நுாற்றுக்கும் மேற்பட்ட நகர் பகுதிகளில் வீடுகள் தண்ணீரில் மிதந்தது. 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்தது. 20 ஆயிரம் ஏக்கரில் விளை நிலங்கள் பாதித்தன. 15 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அத்துடன் ஏராளமான கால்நடைகள் இறந்தன.

ஏற்கனவே, கடந்த 2015ல் கடலுார் கெடிலம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், மண் அரிப்பு ஏற்பட்டு கரை உடைந்தது. இதனால் நகர பகுதிகளில் தண்ணீர் புகுந்து கடும் பாதிப்பு ஏற்பட்டது. அதையடுத்து, ஆற்றின் இரு கரைகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பருவ மழை துவங்கும் முன்பாக ஆற்றில் கருவேல மரங்கள் அகற்றி துார்வாரும் பணி நடக்கிறது. இதனால் தற்போது, 80 ஆயிரம் கனஅடி தண்ணீர் ஓடியும் பாதிப்பு ஏற்படவில்லை. தென்பெண்ணையாற்றின் கரைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தற்போது பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் மழை தொடரும் என, வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளதால், மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளத்தால் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் சவுக்கு கட்டைகள் கட்டி மணல் மூட்டைகள் அடுக்கியும், பொக்லைன் மூலம் கரைகளை பலப்படுத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில், கடலுார் செம்மண்டலம், குண்டு உப்பலவாடி, மருதாடு, நெல்லிக்குப்பம் அருகே விஸ்வநாதபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் கரைகள் சீரமைப்பு பணி, பொதுப்பணித்துறை சார்பில் நடந்து வருகிறது. பாதிப்பு ஏற்பட்டு பின்பு வேகம் காட்டும் மாவட்ட நிர்வாகம், முன்னெச்சரிக்கையாக கரைகளை பலப்படுத்தியிருந்தால், இத்தனை பாதிப்புகள் ஏற்பட்டிருக்காது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X