பொது செய்தி

தமிழ்நாடு

நீரோட்டம் பார்த்து அமைக்காத சாலைகள் மழை நீர் வடிய மோட்டார்கள் தான் தீர்வா?

Added : நவ 23, 2021
Share
Advertisement
அடையாறு : சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில், வடிகால் கட்ட முடியாத, அகலம் குறைவான மற்றும் குறுக்கு தெருக்களில், நீரோட்டம் பார்த்து சாலை அமைக்காததால், மோட்டார் கொண்டு நீரை இறைக்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் பெய்த கன மழைக்கு, பல சாலைகளில் மழை நீர் தேங்கியது. மழை நீர் வடிகால் இருந்தும், நீரோட்டம் இல்லாததால், சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது.பல இடங்களில், வடிகால்
 நீரோட்டம் பார்த்து அமைக்காத சாலைகள் மழை நீர் வடிய மோட்டார்கள் தான் தீர்வா?

அடையாறு : சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில், வடிகால் கட்ட முடியாத, அகலம் குறைவான மற்றும் குறுக்கு தெருக்களில், நீரோட்டம் பார்த்து சாலை அமைக்காததால், மோட்டார் கொண்டு நீரை இறைக்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் பெய்த கன மழைக்கு, பல சாலைகளில் மழை நீர் தேங்கியது. மழை நீர் வடிகால் இருந்தும், நீரோட்டம் இல்லாததால், சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது.பல இடங்களில், வடிகால் கட்ட முடியாமல், அகலம் குறைவான தெருக்கள் மற்றும் குறுக்கு தெருக்கள் உள்ளன. அதுபோன்ற, மேடான தெருக்களில் இருந்து, தாழ்வாக செல்லும் தெருக்களிலும் மழை நீர் வடியாமல் தேங்கியது.

இதனால், பல இடங்களில் மழை நீர் வீடுகளில் புகுந்தது. இதற்கு நீரோட்டம் பார்த்து சாலை அமைக்காததே காரணம் என, சமூக ஆர்வலர்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர். இதனால், பல தெருக்களில் தேங்கிய மழை நீர் மோட்டார் கொண்டு இறைக்கப்பட்டது. அடையாறு, வேளச்சேரி, திருவான்மியூர், துரைப்பாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லுார் போன்ற இடங்களில், ஒரே தெருவில் இரண்டு, மூன்று மோட்டார்கள் வைத்து நீர் இறைக்கப்பட்டது.வடிகால் இல்லாத தெருக்களில், நீரோட்டம் பார்த்து சாலை அமைத்திருந்தால், மோட்டார் கொண்டு நீரை இறைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.

மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டதுடன், ஊழியர்களின் நேர விரையம், தெருவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் என, பலதரப்பட்ட மக்கள் சிரமப்பட்டனர்.இனிமேல், சாலை அமைக்கும்போது, மழைநீர் வடிந்து செல்லும் வகையில், நீரோட்டம் பார்த்து சாலை அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X