பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்...

Added : நவ 23, 2021
Share
Advertisement
அழகிய வழிகாட்டி அறிவிப்புகள்பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகாக்களில், பசுமையான விளைநிலங்கள், மாசாணியம்மன் கோவில், ஆழியாறு அணை போன்றவை உள்ளன. மேலும், வால்பாறை மலைப்பகுதி, டாப்சிலிப் என, சுற்றுலா தலங்களும் உள்ளன.இந்நிலையில், பொள்ளாச்சி கோட்ட மாநில நெடுஞ்சாலை துறை, சுற்றுலா வளர்ச்சிக்கு உதவ முயற்சிக்கிறது. முக்கிய சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வழித்தடங்களில், சுற்றுலா

அழகிய வழிகாட்டி அறிவிப்புகள்

பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகாக்களில், பசுமையான விளைநிலங்கள், மாசாணியம்மன் கோவில், ஆழியாறு அணை போன்றவை உள்ளன. மேலும், வால்பாறை மலைப்பகுதி, டாப்சிலிப் என, சுற்றுலா தலங்களும் உள்ளன.இந்நிலையில், பொள்ளாச்சி கோட்ட மாநில நெடுஞ்சாலை துறை, சுற்றுலா வளர்ச்சிக்கு உதவ முயற்சிக்கிறது.

முக்கிய சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வழித்தடங்களில், சுற்றுலா தலத்தின் சிறப்பு அம்சத்தை ஓவியமாகவும், புகைப்படமாகவும் இணைத்து, கண்கவரும் வழிகாட்டி அறிவிப்பு பலகைகள் அமைத்து வருகின்றனர். இது, அவ்வழியே செல்லும் பயணியருக்கு உதவியாகவும், ஆர்வத்தை துாண்டும் வகையிலும் உள்ளது.
மாணவர்களுக்கு சீருடை வினியோகம்

கொரோனா பரவல் காரணமாக, நீண்ட இடைவெளிக்குப் பின் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மாணவர்களின் நலன் கருதி பள்ளி திறப்புக்கு முன்னரே 6 முதல், 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட்டன.தற்போது, 6 முதல், 8ம் வகுப்பு வரை, சத்துணவு உண்ணும் மாணவ, மாணவியருக்கு வண்ணச் சீருடைகள் வழங்கப்படுகின்றன. நேற்று, உடுமலை அடுத்த ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.தலைமையாசிரியர் சாவித்ரி தலைமை வகித்தார். மாணவர்கள், விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வரவும், சுகாதார முறைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டது. ஆசிரியர் கண்ணபிரான், சிறப்பான கற்றல் செயல்பாடுகளில் ஈடுபட்டவர்களை வாழ்த்தினார்.

ஒரு வார்டாவது ஒதுக்குங்க!
வால்பாறை தாலுகா மா.கம்யூ., கட்சியின் பொதுச்செயலாளர் பரமசிவன், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:வால்பாறையில் மொத்தம் உள்ள, 21வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம், பல்வேறு கட்சிகளின் சார்பில் விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது.

பழங்குடியின மக்கள் அதிக அளவில் வசிக்கும் வால்பாறை மலைப்பகுதியில், அவர்கள் போட்டியிட வசதியாக ஒரு வார்டு கூட ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இது, பழங்குடியின மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரப்படாத நிலையில், அவர்களின் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், பழங்குடியின மக்கள் அதிக அளவில் வசிக்கும் பகுதியில், ஒரு வார்டாவது ஒதுக்கீடு செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளார்.

கபசுர குடிநீர் வழங்கல்
உடுமலை அடுத்த கொமரலிங்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 840 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். நோய் தடுப்பு நடவடிக்கையாக, 6 முதல், 12ம் மாணவர்கள், சுழற்சி முறையில் பள்ளிக்கு வரவழைக்கப்படுகின்றனர்.இந்நிலையில், சீதோஷ்ண நிலை மாற்றத்தால், மாணவர்களுக்கு காய்ச்சல், சளி பாதிப்பு ஏற்படுவதை தடுக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அனைத்து மாணவ, மாணவியருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. அரசு சித்தா டாக்டர் கணேஷ், மழைக்கால நோய்களில் இருந்து பாதுகாப்பது குறித்து பேசினார்.பள்ளித் தலைமையாசிரியர் மாரியப்பன், உதவி தலைமையாசிரியர் செந்தில்குமார், ஆசிரியர்கள் முத்துக்கருப்பன், மயில்சாமி, உடற்கல்வி ஆசிரியர் விஜயராகவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.ரோடுகள் சந்திப்பில் குப்பைபொள்ளாச்சி, மகாலிங்கபுரம் விஜயராகவன் வீதி - நேரு வீதி சந்திப்பு, நான்கு ரோடுகள் சந்திப்பாக உள்ளது. இங்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன் வரை, ரோட்டோரம் நகராட்சி நிர்வாகம் குப்பைத் தொட்டி வைத்திருந்தது.
சுற்றுப்பகுதி கடைக்காரர்கள், குடியிருப்புவாசிகள் அந்த குப்பைத் தொட்டியில், கழிவுகளை கொட்டிச் சென்றனர். அவ்வப்போது, நகராட்சியின் குப்பை லாரி வந்து, குப்பைத் தொட்டியை சுத்தம் செய்து சென்றது. அங்கிருந்த குப்பைத் தொட்டி அகற்றப்பட்டது. வீடு வீடாக குப்பை சேகரிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனாலும், அதே இடத்தில் குப்பை உள்ளிட்ட கழிவுகளை மக்கள் கொட்டிச் செல்கின்றனர்.

தற்போது அந்த இடத்தில் குப்பை தேங்கி, சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இரண்டு ஆண்டுகளாக நீடிக்கும் இப்பிரச்னைக்கு, நகராட்சி தீர்வு காணாமல் அலட்சியம் காட்டுவது, அப்பகுதியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.ஓடுதளத்தில் உரல் எதற்கு?பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்டில் பிரவேசிக்கும் கோவை பஸ்கள், அவற்றுக்கான நிறுத்துமிடம் செல்லும் வழியில், ஓடுதளம் உருக்குலைந்து பள்ளமாக காணப்பட்டது.அதில், பஸ்கள் இறங்கி விடாமல் இருக்க, பள்ளத்தில் பழைய உரலை கொண்டு வந்து போட்டிருந்தனர். இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இதையடுத்து, உருக்குலைந்த ஓடுதளம் சீரமைக்கப்பட்டது.ஆனால், அங்கு போடப்பட்டிருந்த உரலை மட்டும், அப்புறப்படுத்தாமல் அப்படியே விட்டுச் சென்றுள்ளனர். அந்த உரல் தற்போது பஸ்களுக்கு இடையூறாக ஓடுதளத்தில் கிடக்கிறது. அதிகாரிகளின் இச்செயல் பொதுமக்களின் கேலிக்குள்ளாகியுள்ளது. இது போன்ற விஷயங்களில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

மாடுகள் விற்பனை அதிகரிப்பு

உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியில், விவசாயம் சார்ந்த கால்நடை வளர்ப்பும் முக்கிய தொழிலாக உள்ளது. அவ்வகையில், உடுமலை கோட்டத்தில், 62 ஆயிரம் எண்ணிக்கையில் கால்நடைகள் கணக்கிடப்பட்டுள்ளன. ஆனால், பல ஆண்டுகளாக, கால்நடைகளின் கணக்கீடு மாறுபடாமல் உள்ளது. இதற்கு, கால்நடைகள் இனவிருத்தி அதிகரித்தாலும், அதற்கு இணையாக விற்பனையும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கால்நடைத்துறையினர் கூறியதாவது:பால் உற்பத்தி மட்டுமின்றி, இறைச்சிக்காகவும் அடிமாடுகள் வாங்கப்படுகிறது. குறிப்பாக, ஜன., முதல் ஜூன் மாதம் வரை, மாடுகள் விற்பனை அதிகரிக்கும். கோடை என்பதால், தீவனங்கள் விலை அதிகரிப்பு, பால் சுரக்கும் தன்மை குறைவு போன்ற காரணங்களால், பலரும், மாடுகளை விற்க முற்படுகின்றனர்.செயற்கை கருவூட்டல் முறையில் இனவிருத்தியை அதிகரிக்கச்செய்தாலும், கால்நடைகள் விற்பனை எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

இத்தகைய கணக்கீட்டை பின்பற்றியே, பசுந்தீவனம், மருத்துவம் போன்ற பல்வேறு திட்டங்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு முறையாக பெறப்படுகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.விளையாட்டு மைதானம் தேவைநெகமம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் சார்பில், பெற்றோர் - ஆசிரியர் கழக தலைவர் சந்திரசேகரன், எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமனிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:நெகமம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில், 184 மாணவிகள் படிக்கின்றனர். பள்ளி மாணவிகள், தங்கள் விளையாட்டு ஆர்வம் மற்றும் திறமையை வெளிப்படுத்த தீவிரமாக உள்ளனர். ஆனால், மைதானம் இல்லாததால் விளையாட முடியாமல் தவிக்கின்றனர்.மேலும், பள்ளி வளாகத்தின் முன்பகுதியில் அமைந்துள்ள தரை தளத்தில், மழை நீர் வெளியேற முடியாமல் தேங்கி, சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதனால், மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் வகுப்புகளுக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, தரைதளத்தில் மழை நீர் தேங்காமல் இருக்க, கான்கிரீட் தளம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி மாணவிகள் விளையாட மைதான வசதி ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.பாழடைந்து கிடக்கும் சமுதாய நலக்கூடம்மடத்துக்குளம் தாலுகா கண்ணாடிப்புத்துார் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சமுதாய நலக்கூடம் அமைக்கப்பட்டது.பல லட்சம் ரூபாய் நிதியில் அமைக்கப்பட்ட இந்த கட்டடத்தில், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இங்கு நிகழ்ச்சிகள் நடந்தன. அதற்குப்பின் பயன்படுத்தப்படாமல், பாழடைந்துள்ளது.பொதுமக்கள் கூறியதாவது: சமுதாய நலக்கூடம் கட்டடத்தை சுற்றி புதர்களும் வளர்ந்துள்ளன. நுழைவாயில் பகுதியில் உள்ள போர்டிகோவை 'குடி'மகன்கள் திறந்தவெளி 'பாராக' பயன்படுத்துகின்றனர். பல மாதமாக பூட்டப்பட்டுள்ளதால், இந்தக்கட்டடம் பராமரிப்பின்றி பாழடைந்து விஷப்பூச்சிகள் இருப்பிடமாக மாறியுள்ளது. பின்பகுதி திறந்தவெளி கழிப்பிடமாகியுள்ளது.கொரோனா கால கட்டம் கடந்து, இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ள நிலையில், இந்த கட்டடத்தை துப்புரவு செய்து, பராமரித்து மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X