டிரைவர் 'லீவு'; அரசு பஸ் நிறுத்தம்: மாணவர்கள் அவதி

Added : நவ 23, 2021
Share
Advertisement
வால்பாறை:ேஷக்கல்முடியில் இருந்து வால்பாறை வழியாக, கோவைக்கு இயக்கப்படும் அரசு பஸ் திடீரென நிறுத்தப்பட்டதால், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.வால்பாறை அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், பல்வேறு வழித்தடங்களில், 37 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில், 20க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்க முடியாத அளவுக்கு 'டப்பா' பஸ்களாக உள்ளன. இதனால் இந்த பஸ்கள்

வால்பாறை:ேஷக்கல்முடியில் இருந்து வால்பாறை வழியாக, கோவைக்கு இயக்கப்படும் அரசு பஸ் திடீரென நிறுத்தப்பட்டதால், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.வால்பாறை அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், பல்வேறு வழித்தடங்களில், 37 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில், 20க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்க முடியாத அளவுக்கு 'டப்பா' பஸ்களாக உள்ளன. இதனால் இந்த பஸ்கள் அடிக்கடி பழுதாகி நடுரோட்டில் நிற்பதும், பயணிகள் அவதிப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது.ேஷக்கல்முடியில் இருந்து, காலை, 6:45 மணிக்கு வால்பாறை வழியாக கோவை அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சில் வால்பாறை நகரில் உள்ள பல்வேறு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் பயணம் செய்கின்றனர்.நேற்று காலை ேஷக்கல்முடியில் இருந்து இயக்கப்பட வேண்டிய அரசு பஸ் வரவில்லை. இதனால், பள்ளி மாணவர்கள் மற்றும் பயணிகள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து, வேறு பஸ்களில் பயணம் செய்தனர்.காலை நேரத்தில் இயக்கப்பட வேண்டிய பஸ் திடீரென நிறுத்தப்பட்டதால், பள்ளி மாணவர்கள், வெளியூர் செல்லும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.வால்பாறை அரசு போக்குவரத்துக்கழக கிளை மேலாளர் ராஜ்குமாரிடம் கேட்டபோது, ''அனைத்து வழித்தடங்களிலும், பஸ் வழக்கம் போல் இயக்கப்படுகிறது. ேஷக்கல்முடியில் இருந்து கோவை செல்லும் பஸ், பொள்ளாச்சி கோட்டத்திற்கு உட்பட்டது. பஸ் டிரைவர் திடீர் விடுப்பு எடுத்ததால், ேஷக்கல்முடிக்கு பஸ் இயக்கப்படவில்லை. அந்த பஸ் வழக்கம் போல் இயங்கும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X