பொது செய்தி

தமிழ்நாடு

ஒட்டன்சத்திரத்துக்கு குடிநீர் எடுக்கக்கூடாது! திட்டத்தை கைவிடக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Added : நவ 23, 2021
Share
Advertisement
ஆனைமலை:'ஆழியாறு, திருமூர்த்தி அணைகளில் இருந்து, ஒட்டன்சத்திரம் பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும்,' என, ஆழியாறு புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு விவசாயிகள் வலியுறுத்தி, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆனைமலை அடுத்த வேட்டைக்காரன்புதுார் பொதுப்பணித்துறை அலுவலகம் முன், நேற்று காலை, ஆழியாறு படுகை புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசன
 ஒட்டன்சத்திரத்துக்கு குடிநீர் எடுக்கக்கூடாது! திட்டத்தை கைவிடக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ஆனைமலை:'ஆழியாறு, திருமூர்த்தி அணைகளில் இருந்து, ஒட்டன்சத்திரம் பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும்,' என, ஆழியாறு புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு விவசாயிகள் வலியுறுத்தி, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆனைமலை அடுத்த வேட்டைக்காரன்புதுார் பொதுப்பணித்துறை அலுவலகம் முன், நேற்று காலை, ஆழியாறு படுகை புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் நலச்சங்கங்களின் விவசாயிகள், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.புதிய ஆயக்கட்டு பாசன சங்கத்தின் தலைவர் அசோக்குமார், செயலாளர் செந்தில் மற்றும் பழைய ஆயக்கட்டு பாசன சங்கத்தின் தலைவர் ராஜாமணி, செயலாளர் வித்யாசாகர் தலைமை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:ஆழியாறு அணை அல்லது திருமூர்த்தி அணையிலிருந்து, ஒட்டன்சத்திரம் பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும். ஏற்கனவே பி.ஏ.பி., திட்டத்தில் ஆண்டுதோறும் கிடைக்கக்கூடிய சராசரி நீரை கருத்தில் கொள்ளாமல், திருமூர்த்தி பாசனத்தில் ஆயக்கட்டு அதிகரிக்கப்பட்டு உள்ளது.ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்றாததால் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஒட்டன்சத்திரம் பகுதிக்கு நீரை கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பது, ஒட்டுமொத்த பி.ஏ.பி., திட்டத்தையே முடங்கச்செய்யும்.இந்தாண்டு புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு கோரிக்கைப்படி, 2,880 மில்லியன் கனஅடி நீர் வழங்க வேண்டும். புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு ஆண்டுதோறும் ஒப்பந்தப்படி பாசன நீர் வழங்க வேண்டும். கால்வாய்களில் குடிமராமத்து செய்து, கடைமடை வரையில் நீர் கொண்டு செல்ல வேண்டும். காண்டூர் கால்வாய் புனரமைப்பு பணியின்போது, சர்க்கார்பதி முதல் நல்லாறு வரை மலையிலிருந்து இயற்கையாக வரும் நீரோடைகளை, காண்டூர் கால்வாயில் திசை திருப்பி விடப்பட்டுள்ளது. இயற்கையாக உள்ள நீரோடைகளை முன்பு இருந்ததைப் போலவே அதன் போக்கிலேயே மாற்றியமைக்க வேண்டும்.இவ்வாறு, பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X