பொது செய்தி

தமிழ்நாடு

கோதவாடி குளத்துக்கு நீர் நிறுத்தம்

Added : நவ 23, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, வடசித்துார் ஆற்றின் குறுக்கே, கோதவாடி குளம் செல்லும் வழியில், ஏழுக்கும் மேற்பட்ட தடுப்பணைகள் அமைந்துள்ளன. கடந்த வாரம், மெட்டுவாவி கிளைக்கால்வாயில் இருந்து, கோதவாடி குளத்துக்கு திறக்கப்பட்ட பி.ஏ.பி., உபரி நீரால், இரண்டு தடுப்பணைகள் தவிர மற்ற அனைத்தும் நிரப்பப்பட்டன.இருப்பினும், குளத்துக்கு நீர் வரத்து இல்லை. இந்நிலையில், மெட்டுவாவி

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, வடசித்துார் ஆற்றின் குறுக்கே, கோதவாடி குளம் செல்லும் வழியில், ஏழுக்கும் மேற்பட்ட தடுப்பணைகள் அமைந்துள்ளன. கடந்த வாரம், மெட்டுவாவி கிளைக்கால்வாயில் இருந்து, கோதவாடி குளத்துக்கு திறக்கப்பட்ட பி.ஏ.பி., உபரி நீரால், இரண்டு தடுப்பணைகள் தவிர மற்ற அனைத்தும் நிரப்பப்பட்டன.இருப்பினும், குளத்துக்கு நீர் வரத்து இல்லை. இந்நிலையில், மெட்டுவாவி கிளைக்கால்வாய் மூடப்பட்டு, குளத்து நீர் வழங்குவது நிறுத்தப்பட்டது.கூடுதலாக ஒரு வார காலத்துக்கு வடசித்துார் வழியாக குளத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என, பாசன சங்க தலைவர்கள், பி.ஏ.பி., திட்ட அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களால் முடிவு செய்யப்பட்டு, நேற்று முன்தினம் நீர் திறக்கப்பட்டது.தடுப்பணைகளின் நீர் மட்டம் சற்று உயர்ந்த நிலையில், திடீரென நேற்று காலை, நீர் அடைக்கப்பட்டது. இதனால், குளம் நிரம்பும் என, காத்திருந்தவிவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X