பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி பள்ளிகளில் அமைக்க அறிவுறுத்தல்

Added : நவ 23, 2021
Share
Advertisement
'பள்ளிகள் அளவில், குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி அமைக்க வேண்டும்,'' என, கலெக்டர் வினீத் அறிவுறுத்தியுள்ளார்.திருப்பூர் மாவட்டத்தில், கல்வித்துறை அதிகாரிகள் ஒருங்கிணைப்பு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் வினீத் தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வரும்

'பள்ளிகள் அளவில், குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி அமைக்க வேண்டும்,'' என, கலெக்டர் வினீத் அறிவுறுத்தியுள்ளார்.திருப்பூர் மாவட்டத்தில், கல்வித்துறை அதிகாரிகள் ஒருங்கிணைப்பு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் வினீத் தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், பள்ளி வளாகத்தில் உள்ள, பழுதான கட்டடங்கள் குறித்து கேட்டறியப்பட்டது.

குறிப்பாக, சத்துணவு மைய சமையல் கூடங்கள் பழுதாகியுள்ள பள்ளிகள் விவரத்தை, தலைமை ஆசிரியர்களிடம் கேட்டனர்.பழுதாகி, இடியும் நிலையில் உள்ள சமையல் கூடங்களை இடித்து அப்புறப்படுத்துமாறு கலெக்டர் அறிவுறுத்தினார்.கலெக்டர் வினீத் பேசுகையில்,''குழந்தை உரிமை பாதுகாப்பு கமிஷன் அறிவுறுத்தியபடி, குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி அமைக்கப்படும். பள்ளிகள் அளவிலும், குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி அமைக்கலாம். பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் அதிகாரிகள் அடங்கிய, குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி அமைக்கப்பட வேண்டும். பழுதாகியுள்ள சமையல் கூடங்களை அகற்றிவிட்டு, புதிய கட்டடம் கட்ட பரிந்துரைக்கலாம்,'' என்றார். - நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X