பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சிகளில் 'ரிசர்வ்' இடங்கள் கபளீகரம்! வேலியே பயிரை மேய்ந்த கதை

Added : நவ 23, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, சொலவம்பாளையத்தில், ரிசர்வ் சைட்டில், 22.65 லட்சம் ரூபாய் செலவில் ஊராட்சி அலுவலகம் கட்டப்பட்டுள்ளதால், சட்டச்சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், முதல்வர் திறப்பு விழா நிகழ்ச்சியில் இருந்து, இக்கட்டடம் நீக்கம் செய்யப்பட்டது.கிணத்துக்கடவு ஒன்றியம், சொலவம்பாளையம் அண்ணாமலை நகரில், தேசிய ஊரக வேலைஉறுதி திட்டத்தின் கீழ், 22.65 லட்சம் மதிப்பீட்டில்
  ஊராட்சிகளில் 'ரிசர்வ்' இடங்கள் கபளீகரம்! வேலியே பயிரை மேய்ந்த கதை

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, சொலவம்பாளையத்தில், ரிசர்வ் சைட்டில், 22.65 லட்சம் ரூபாய் செலவில் ஊராட்சி அலுவலகம் கட்டப்பட்டுள்ளதால், சட்டச்சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், முதல்வர் திறப்பு விழா நிகழ்ச்சியில் இருந்து, இக்கட்டடம் நீக்கம் செய்யப்பட்டது.கிணத்துக்கடவு ஒன்றியம், சொலவம்பாளையம் அண்ணாமலை நகரில், தேசிய ஊரக வேலைஉறுதி திட்டத்தின் கீழ், 22.65 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி அலுவலக கட்டடம் கட்டும் பணி துவங்கியது.

கடந்தாண்டு செப்.,10ல் துவங்கிய கட்டுமானப்பணி, கடந்த, 15ம் தேதி நிறைவடைந்தது. இக்கட்டடத்தை கோவை வந்த முதல்வரால் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், தன்னார்வலர் அமைப்பு சார்பில், இக்கட்டடம் ரிசர்வ் சைட்டில் அமைந்துள்ளதாக, முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, உயர் அதிகாரிகளின் தலையீட்டால், கட்டட திறப்பு விழா பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.

இதுபற்றி, தன்னார்வலர்கள் கூறியதாவது:சொலவம்பாளையம் அண்ணாமலை நகரில், 'ரிசர்வ்' இடத்தில் ஏற்கனவே, மேல்நிலை தொட்டி, மகளிர் சுய உதவி குழு கட்டடம் ஆகியன அமைந்துள்ளது.பொதுவாக, என்ன பயன்பாட்டிற்கு 'ரிசர்வ் சைட்' ஒதுக்கப்பட்டுள்ளதோ, அதற்கான வசதிகளை உள்ளாட்சி அமைப்புகள் ஏற்படுத்த வேண்டும்.ஏற்கனவே, பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் இதுபோன்று ரிசர்வ் சைட்டில், ஊராட்சி அலுவலகம் கட்டிய போது, கலெக்டர் உத்தரவால், கட்டுமானப்பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், ரிசர்வ் சைட்டில் கட்டி முடிக்கப்பட்ட, சொலவம்பாளையம் ஊராட்சி அலுவலகம் திறப்பதில் சட்டச்சிக்கல் ஏற்பட்டுள்ளது.நகர் ஊரமைப்பு துறையில், லே - அவுட்க்கு அனுமதி பெறும் போது, பொது ஒதுக்கீட்டு இடங்கள் வகைப்படுத்தப்படுகின்றன. அந்த இடங்கள் ஊராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஆனால், பெரும்பாலான ஊராட்சிகளில், 'ரிசர்வ் சைட்'கள் உரிய பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுவதில்லை.பல இடங்களில், 'லே - அவுட்' அமைத்தவர்களே, 'ரிசர்வ்' இடத்தை விற்பனை செய்து முறைகேடு செய்துள்ளனர். சில இடங்களில், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று, ஊராட்சி அலுவலகம், மக்கள் சேவை மையம், வணிக வளாகம் என, அரசு கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளன. சொலவம்பாளையத்தில் ஊராட்சி அலுவலக கட்டடம் கட்டப்பட்டுள்ளது.'ரிசர்வ சைட்' இடத்தை எவ்விதத்திலும், வகை மாற்றம் செய்து விற்கவோ, அரசு கட்டுமானம் கட்டவோ கூடாது என, உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால், 'ரிசர்வ் சைட்' இடத்தில் கட்டப்பட்ட கட்டுமானங்களை, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள், நகர் ஊரமைப்பு துறையுடன் இணைந்து அப்புறப்படுத்தி வருகிறது. ஆனால், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அரசு கட்டுமானங்களை அதிகாரிகள் என்ன செய்யப்போகிறார்கள் என்பது, முதல்வருக்கே வெளிச்சம்.இவ்வாறு, தெரிவித்தனர்.கட்டடத்தை என்ன செய்வாங்க!ஊராட்சி செயலாளர் முத்துச்சாமி கூறுகையில், ''கட்டட கட்டுமானப்பணி இன்னமும் நிறைவு பெறவில்லை. அதனால், முதல்வர் திறப்பு விழா பட்டியலில் இக்கட்டடம் இடம் பெறவில்லை. இந்த இடம் பொது பயன்பாட்டிற்கான இடமாகும்,'' என்றார்.கிணத்துக்கடவு ஒன்றிய பி.டி.ஓ., விவேகானந்தனிடம் கேட்டபோது, ''பிரச்னை என்று தெரிந்ததும், திறப்பு விழா பட்டியலில் இருந்து நீக்கி விட்டோம். இதையெல்லாம் செய்தியாக வெளியிட வேண்டாம்,'' என்றார்.'ரிசர்வ் சைட்' என்ன பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டதோ, அதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்றமும் பல்வேறு தீர்ப்புகள் வாயிலாக அறிவுறுத்தியுள்ளது.ஆனால், அதிகாரிகள் சட்டம் குறித்து அறியாததாலும், அலட்சியத்தாலும், 'ரிசர்வ் சைட்' இடங்களை கபளீகரம் செய்து, கட்டுமானம் கட்டுகின்றனர். கோர்ட் உத்தரவுகளை சுட்டிக்காட்டி பிரச்னை ஏற்படும் போது, கட்டுமானத்தை அப்படியே விட்டு விடுகின்றனர். மக்களின் வரிப்பணம் வீணாகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X