பொது செய்தி

தமிழ்நாடு

சத்ய சாய்பாபா பிறந்தநாள்: பக்தர்கள் பிரார்த்தனை

Added : நவ 23, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி;பொள்ளாச்சி ஸ்ரீ சத்யசாய் சேவா சமிதி சார்பில், சத்ய சாய்பாபாவின் பிறந்த நாள் விழா வெங்கடேசா காலனி ஸ்ரீ வாரி கார்டன்ஸ், சாய் மதுரம் கோவிலில் கடந்த, 18ம் தேதி சிறப்பு சாய் பஜனுடன் துவங்கியது.கடந்த, 19ம் தேதி அபிராமி அந்தாதி பாராயணம், திருவிளக்கு வழிபாடு; 20ம் தேதி சத்யசாய் சத்சங்கம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது.கோட்டூர் மலையாண்டிபட்டணத்தில், 21ம் தேதி பாபாவின் கமல
 சத்ய சாய்பாபா பிறந்தநாள்: பக்தர்கள் பிரார்த்தனை

பொள்ளாச்சி;பொள்ளாச்சி ஸ்ரீ சத்யசாய் சேவா சமிதி சார்பில், சத்ய சாய்பாபாவின் பிறந்த நாள் விழா வெங்கடேசா காலனி ஸ்ரீ வாரி கார்டன்ஸ், சாய் மதுரம் கோவிலில் கடந்த, 18ம் தேதி சிறப்பு சாய் பஜனுடன் துவங்கியது.கடந்த, 19ம் தேதி அபிராமி அந்தாதி பாராயணம், திருவிளக்கு வழிபாடு; 20ம் தேதி சத்யசாய் சத்சங்கம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது.கோட்டூர் மலையாண்டிபட்டணத்தில், 21ம் தேதி பாபாவின் கமல திருப்பாதங்களில், 96 பாமாலைகள் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடந்தது. நேற்றுமுன்தினம் சாய் மதுரம் கோவிலில் ஜெயபிரகாஷ் நாராயணனின் சிறப்பு பக்தி பாமாலை நிகழ்ச்சி நடந்தது.நேற்று காலை, ஓம்காரம், சுப்ரபாதம், நகரசங்கீர்த்தனம், பிரசாந்தி கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. சத்யசாய் நாம ஜெபம், லட்சுமி குபேர ேஹாம பூஜைகளும், மதியம், 12:00 மணிக்கு அன்னதானமும் நடந்தது.சாய் பக்தர்களின் 'சாய் கானாமிர்தம்' நிகழ்ச்சி; ஊஞ்சல் உற்சவம், மகா மங்கள ஆரத்தி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.உடுமலைஉடுமலை டி.வி., பட்டிணத்திலுள்ள, ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதியில், சத்ய சாய்பாபா, பிறந்தநாளையொட்டி, நேற்று, பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது.காலையில், சத்ய சாய்பாபாவுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. மதியம், பக்தர்கள் சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, சத்ய சாய் பஜன் பாடல்கள் பாடி பக்தர்கள் மனமுறுகி பிரார்த்தனை செய்தனர். சத்ய சாய்பாபாவின் ஆன்மிக வரலாறு குறித்து, பக்தர்கள் சொற்பொழிவாற்றினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X