ரூ.3.5 லட்சம் மதிப்பில் 16 இடங்களில் கேமரா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.3.5 லட்சம் மதிப்பில் 16 இடங்களில் கேமரா

Added : நவ 23, 2021
Share
கிணத்துக்கடவு:வடசித்துாரில் 16 இடங்களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி துவங்கியது.நெகமம் போலீசார், தங்கள் எல்லைக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் சென்று, ஊராட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் சமூக அமைப்பினரை சந்தித்து, கண்காணிப்பு கேரமா பொருத்துவதன் அவசியத்தை விளக்குகின்றனர். முக்கிய சந்திப்புகள், பொது இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த

கிணத்துக்கடவு:வடசித்துாரில் 16 இடங்களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி துவங்கியது.நெகமம் போலீசார், தங்கள் எல்லைக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் சென்று, ஊராட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் சமூக அமைப்பினரை சந்தித்து, கண்காணிப்பு கேரமா பொருத்துவதன் அவசியத்தை விளக்குகின்றனர். முக்கிய சந்திப்புகள், பொது இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த சில நாட்களாக, வடசித்துார் கிராமத்தில், ரூ.3.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 16 கண்காணிப்பு கேமராக்கள் கொள்முதல் செய்யப்பட்டு, ஊராட்சி அலுவலக வளாகம், நெகமம் - கிணத்துக்கடவு - காட்டம்பட்டி ரோடு சந்திப்பு, கடைவீதி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட, 16 இடங்களில் பொருத்தப்படுகின்றன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X