பொது செய்தி

தமிழ்நாடு

தொடர் மழையால் தக்காளி வரத்து சரிவு: ஒரு வாரமாக உச்சத்தில் விலை

Added : நவ 23, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில், தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. சுற்றுப்பகுதிகளில் விளையும் தக்காளி, உடுமலை நகராட்சி சந்தை மற்றும் புற நகர் பகுதியிலுள்ள தக்காளி மார்க்கெட்களில், ஏல முறையில் விற்பனை செய்யப்படுகிறது.கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், தக்காளி செடிகள், காய்கள் அழுகி, சாகுபடியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொடி முறையில் நடவு செய்யப்பட்ட தக்காளி மட்டுமே தற்போது சந்தைகளுக்கு விற்பனைக்கு வருகிறது. உடுமலை நகராட்சி சந்தைக்கு, 14 கிலோ கொண்ட பெட்டிகள், சராசரியாக, 30 ஆயிரம் வரை வரத்து காணப்படும்.மழை காரணமாக, தக்காளி வரத்து சரிந்து, சந்தையிலுள்ள, 32 கமிஷன் கடைகளுக்கும், தலா, 20 முதல் 100 பெட்டிகள் மட்டுமே வரத்து உள்ளது.வரத்து குறைவு காரணமாக, தினசரி தக்காளி ஏலம் பரபரப்பாக நடந்து வருகிறது. கடந்த வாரம், ஒரு பெட்டி, ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.கடந்த, 20ம் தேதி, புதிய உச்சமாக, 1,500 ரூபாய்க்கு விற்றது. தொடர்ந்து, மழை ஓரளவு குறைந்ததோடு, வெளி மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் வருகை ஓரளவு குறைந்ததால், விலை குறையத்துவங்கியது.
இரு நாட்களாக, ஒரு பெட்டி, ஆயிரம் முதல், 1,200 ரூபாய் வரை விற்பனையானது. சில்லரை விற்பனையில், ஒரு கிலோ தக்காளி, 120 ரூபாய் வரை விற்பனையானது.வியாபாரிகள் கூறியதாவது:நிலைப்பயிராக இருந்த தக்காளி செடிகள் அழுகிய நிலையில், தொடர் மழை காரணமாக, புதிதாக நடவு செய்ய முடியாமலும் உள்ளது. கொடி முறையில் நடவு செய்த தக்காளி மட்டுமே தற்போது, விற்பனைக்கு வருகிறது.
கடந்த, 20ம் தேதி, ஒரு பெட்டி, 1,500 ரூபாய் வரை விற்பனையான நிலையில், போதியளவு தக்காளியும் வரத்து இல்லாததால், கேரளா மாநிலம் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் வரத்து குறைந்தது.இதனால், 300 ரூபாய் வரை குறைந்து, அதிகப்பட்ச விலையாக, 1,200 நிலவுகிறது. மழை குறைந்து, தக்காளி நடவு செய்து, வரத்து வந்தால் மட்டுமே, சீரான விலை நிலவ வாய்ப்புள்ளது.இவ்வாறு, கூறினர்.

Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X