பொது செய்தி

தமிழ்நாடு

ஏரியில் சிக்கியது மஞ்சள் நிற ஆமை

Added : நவ 23, 2021
Share
Advertisement
சென்னை : ஏரியில், மீன் பிடி வலையில் சிக்கிய அரியவகை மஞ்சள் நிற ஆமை வண்டலுார் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டது. அது குறித்து, பூங்கா மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார், இருங்காட்டுகோட்டையில் ஒரு ஏரி உள்ளது. நேற்று முன்தினம், தாம்பரத்தைச் சேர்ந்த குழுவினர், அந்த ஏரியில் மீன் பிடித்தனர்.மீன் பிடி வலையில், மஞ்சள் நிறத்தில் ஒரு
 ஏரியில் சிக்கியது மஞ்சள் நிற ஆமை

சென்னை : ஏரியில், மீன் பிடி வலையில் சிக்கிய அரியவகை மஞ்சள் நிற ஆமை வண்டலுார் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டது.

அது குறித்து, பூங்கா மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார், இருங்காட்டுகோட்டையில் ஒரு ஏரி உள்ளது. நேற்று முன்தினம், தாம்பரத்தைச் சேர்ந்த குழுவினர், அந்த ஏரியில் மீன் பிடித்தனர்.மீன் பிடி வலையில், மஞ்சள் நிறத்தில் ஒரு ஆமை சிக்கியது. மஞ்சள் நிறத்தில் அரிய வகை ஆமையாக இருந்ததால், அதை வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர்.பின், வேளச்சேரி வனத்துறை அதிகாரி தனசேகரிடம், அந்த ஆமையை ஒப்படைத்தனர்.

உரிய பாதுகாப்புடன், வண்டலுார் உயிரியல் பூங்காவில், ஆமை ஒப்படைக்கப்பட்டது.கடந்த ஆண்டு, ஜூலை மாதம், ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள, டியுசி என்ற அணையில் இதுபோன்று ஒரு மஞ்சள் நிற ஆமை, மீனவர் வலையில் சிக்கியது.அது, 'டிரையோனிச்சிடே' வகையைச் சேர்ந்த ஆமை என்றும், ஆப்ரிக்கா, ஆசியா மற்றும் வட அமெரிக்காவில் வாழும் மென்மையான ஆமை என்றும், அங்குள்ள வனத் துறையினர் கூறினர்.

அந்த ஆமையைப் போலவே, இருங்காட்டுக் கோட்டை ஏரியில் சிக்கிய மஞ்சள் நிற ஆமையும், 'டிரையோனிச்சிடே' என்ற வகையைச் சேர்ந்ததாக இருக்குமோ என்ற கோணத்தில், வண்டலுார் உயிரியல் பூங்கா மருத்துவர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X