சாலையை ஆக்கிரமித்த மரத்தால் விபத்து அபாயம்

Added : நவ 23, 2021
Share
Advertisement
அம்பத்துார் : சாலையில் விழுந்து விபத்து, உயிரிழப்பை ஏற்படுத்தும் நிலையிலுள்ள மரத்தால், மக்கள் அச்சத்திற்கு ஆளாகி உள்ளனர்.சென்னை அம்பத்துார் தெற்கு பூங்கா வீதியில், தனியார் திருமண மண்டபம் அருகே உள்ள ஒரு பன்னீர்வாகை மரம், அந்த சாலையில் வடக்கு திசையில் இருந்து, தெற்கு திசை வரை சாலையை வளைத்து, பிரமாண்டமாக வளர்ந்துள்ளது.பல அடி துாரத்திற்கு நிழல் கொடுத்தாலும், அதன்

அம்பத்துார் : சாலையில் விழுந்து விபத்து, உயிரிழப்பை ஏற்படுத்தும் நிலையிலுள்ள மரத்தால், மக்கள் அச்சத்திற்கு ஆளாகி உள்ளனர்.

சென்னை அம்பத்துார் தெற்கு பூங்கா வீதியில், தனியார் திருமண மண்டபம் அருகே உள்ள ஒரு பன்னீர்வாகை மரம், அந்த சாலையில் வடக்கு திசையில் இருந்து, தெற்கு திசை வரை சாலையை வளைத்து, பிரமாண்டமாக வளர்ந்துள்ளது.பல அடி துாரத்திற்கு நிழல் கொடுத்தாலும், அதன் அடிப்பாகம் உறுதியிழந்து, வேருடன் சரிந்து விழும் ஆபத்து இருப்பதாக, பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.

மேலும், இந்த சாலையில் செல்லும் பேருந்து மற்றும் கனரக வாகனங்களின் மேற்கூரை, மரத்தில் உரசி சேதமடைவதும் உண்டு.அதனால், வாகன ஓட்டிகள் மரத்தில் உரசாமல் இருக்க தங்களது வாகனத்தை, இடப்பக்கத்தில் இருந்து வலப்பக்கத்திற்கு வளைத்து ஓட்டும் போது, எதிர் திசையில் வரும் மற்ற வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதும் தொடர்கிறது.பலத்த மழை, வாகனங்களின் அதிர்வு காரணமாக, மரம் உறுதியிழந்து திடீரென விழுந்தால், அந்த சாலையில் பயணிப்போர் விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது.அதனால், குறைந்தபட்சம் மரத்தின் பெரிய கிளைகளை வெட்டி, மாநகராட்சி பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X