பாழடைந்த நிலையில் மின்மாற்றி; அலட்சியம் காட்டும் அதிகாரிகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாழடைந்த நிலையில் மின்மாற்றி; அலட்சியம் காட்டும் அதிகாரிகள்

Added : நவ 23, 2021
Share
கொளத்துார், : முதல்வர் தொகுதியில் ஆபத்தான நிலையிலுள்ள மின்மாற்றியை மாற்றக்கோரி புகாரளித்தும், மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.திரு.வி.க., நகர் மண்டலம், 64வது வார்டுக்கு உட்பட்ட கொளத்துார் லட்சுமி நகர், 8வது தெருவில் அடுக்குமாடி குடியிருப்பு அருகே, மின்மாற்றி உள்ளது.இந்த மின்மாற்றியை, தரை கீழ் மின் இணைப்பிற்கு உகந்த மின்மாற்றியாக

கொளத்துார், : முதல்வர் தொகுதியில் ஆபத்தான நிலையிலுள்ள மின்மாற்றியை மாற்றக்கோரி புகாரளித்தும், மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.

திரு.வி.க., நகர் மண்டலம், 64வது வார்டுக்கு உட்பட்ட கொளத்துார் லட்சுமி நகர், 8வது தெருவில் அடுக்குமாடி குடியிருப்பு அருகே, மின்மாற்றி உள்ளது.இந்த மின்மாற்றியை, தரை கீழ் மின் இணைப்பிற்கு உகந்த மின்மாற்றியாக மாற்றம் செய்ய, மின்வாரியம் அந்த பகுதியில் பள்ளம் தோண்டியது.பள்ளம் தோண்டி பல மாதங்கள் ஆகியும், அடுத்தக்கட்ட பணியை மின்வாரியம் துவங்கவில்லை.

இதனால், அந்த பள்ளத்தில் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. மேலும், ஏற்கனவே உள்ள மின்மாற்றிக்கு கீழ் மழை நீர் தேங்கியுள்ளது.இதுகுறித்து மின்வாரியத்திற்கு புகார் அளித்தாலும், அதிகாரிகள் அலட்சியமாக பதில் அளிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.இது குறித்து, பகுதி மக்கள் கூறியதாவது:குடியிருப்பு பகுதியில் 3 மாதங்களுக்கு முன், மின்வாரியம் பள்ளம் தோண்டியது. அதன் பின் கண்டுகொள்ளவில்லை. புகாருக்கும் நடவடிக்கை இல்லை. அசம்பாவிதங்கள் நிகழும் முன், மின் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X