விருத்தாசலம் : சின்னக்கண்டியங்குப்பம் உழவர் உற்பத்தியாளர் குழுவை சேர்ந்த விவசாயிகள் நேற்று விருத்தாசலம் உழவர் சந்தை அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம் அடுத்த சின்னக்கண்டியங்குப்பம் உழவர் உற்பத்தியாளர் குழுவில் நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இக்குழுவில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதால் குழுவின் இயக்குனரை மாற்ற வலியுறுத்தி துறை அதிகாரிகளுக்கு பலமுறை விவசாயிகள் புகார் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.
இதில் ஆத்திரமடைந்த விவசாயிகள் நேற்று காலை 11:00 மணியளவில் விருத்தாசலம் உழவர் சந்தை அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டனர். சப் இன்ஸ்பெக்டர் பரணிதரன் தலைமையிலான போலீசார் வந்து விவசாயிகளிடம் பேசினர். துறை அதிகாரிகளிடம் கூறி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். பின், விவசாயிகள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE