பொது செய்தி

தமிழ்நாடு

அன்னூர் தாலுகா உருவாகி 9 ஆண்டுகள் நிறைவு: பத்தாவது ஆண்டு... இது பத்தாது!முக்கிய கோரிக்கைகள் முடங்கியே கிடக்குது

Added : நவ 23, 2021
Share
Advertisement
அன்னுார்:அன்னுார் தாலுகா உருவாகி, ஒன்பது ஆண்டுகள் முடிந்தும், முக்கிய கோரிக்கைகள் நிறைவேறாமல் முடங்கிக் கிடக்கின்றன.கோவை வடக்கு தாலுகாவில், அன்னுார் எஸ்.எஸ்.குளம் ஒன்றியங்கள் இருந்து வந்தன. அன்னுாரை தலைமையிடமாகக் கொண்டு, புதிய தாலுகா உருவாக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக மக்கள் கோரி வந்தனர். இதையடுத்து, 2012ம் ஆண்டு நவ., 22ல் அன்னுாரை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா

அன்னுார்:அன்னுார் தாலுகா உருவாகி, ஒன்பது ஆண்டுகள் முடிந்தும், முக்கிய கோரிக்கைகள் நிறைவேறாமல் முடங்கிக் கிடக்கின்றன.கோவை வடக்கு தாலுகாவில், அன்னுார் எஸ்.எஸ்.குளம் ஒன்றியங்கள் இருந்து வந்தன. அன்னுாரை தலைமையிடமாகக் கொண்டு, புதிய தாலுகா உருவாக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக மக்கள் கோரி வந்தனர். இதையடுத்து, 2012ம் ஆண்டு நவ., 22ல் அன்னுாரை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவானது.அன்னுார், கோவில்பாளையம், இடிகரை ஆகிய மூன்று பேரூராட்சிகள், 28 ஊராட்சிகளுடன் புதிய தாலுகா உருவானது.

இதனால் அன்னுார் வட்டார மக்கள் கோவை நகருக்கு செல்ல வேண்டிய அலைச்சல் மிச்சமானது. எனினும், தாலுகா உருவாகி, ஒன்பது ஆண்டுகள் முடிந்து, பத்தாவது ஆண்டு நேற்று முன்தினம் துவங்கியது. ஆனாலும், முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் முடங்கிக் கிடக்கின்றன.அன்னுார் மக்கள் கூறியதாவது:அன்னுார் தாலுகா அமைக்கப்பட்டும் இதுவரை கோர்ட் அமைக்கப்படவில்லை. அன்னுார் பகுதி மக்கள் சிவில் வழக்குகளுக்கு கோவைக்கும், கிரிமினல் வழக்குகளுக்கு மேட்டுப்பாளையம் கோர்ட்டுக்கும் செல்ல வேண்டிய நிலை உள்ளது. தமிழக அரசுக்கு பல மனுக்கள் அனுப்பியும் நடவடிக்கை இல்லை.அதேபோல், தாலுகா ஆகியும் இதுவரை வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்கப்படவில்லை. வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு மேட்டுப்பாளையத்துக்கு செல்ல வேண்டியுள்ளது. அன்னுார் கிளை நுாலகம் ஆறரை மணி நேரம் மட்டுமே இயங்கி வருகிறது. தாலுகா நுாலகமாக தரம் உயர்த்தினால், 12 மணி நேரம் செயல்படும்.அன்னுார் அரசு மருத்துவமனையில், 60 படுக்கைகள் மட்டுமே உள்ளன. இந்த மருத்துவமனையை 100 படுக்கைகள் கொண்டதாக தரம் உயர்த்த வேண்டும். பிரேத பரிசோதனை கூடம், அறுவை சிகிச்சைக் கூடம் அமைக்க வேண்டும்.எந்த வசதியும் இல்லாத சாதாரண மருத்துவமனையாக, அன்னுார் கால்நடை மருத்துவமனை உள்ளது. இங்கு கூடுதல் மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், உதவியாளர்கள் நியமித்து தரம் உயர்த்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.ஆக்கிரமிப்பு அகற்றணும்!அன்னுாரில் கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளது. முகூர்த்த நாட்களிலும், பிற நாட்களிலும், காலை மாலை நேரங்களில், நான்கு சாலைகளிலும் 2 கி.மீ., துாரத்துக்கு வாகனங்கள் நிற்கின்றன. அன்னுாரை கடப்பதற்கு, 15 நிமிடங்கள் ஆகின்றன. இதற்கு தீர்வாக, அன்னுார் நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும். கிழக்கு புறவழிச் சாலைக்கு நிதி ஒதுக்கப்பட்டு, நிலம் கையகப்படுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டும் ஒன்றரை ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கிறது. இந்த கோரிக்கைகள் இந்த ஆண்டிலாவது நிறைவேற்றப்பட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X