பொது செய்தி

தமிழ்நாடு

தக்காளி விலை உச்சம் :அன்னூரில் கிலோ ரூ. 140

Added : நவ 23, 2021
Share
Advertisement
அன்னுார்:மழை காரணமாக, அன்னுார் வட்டாரத்தில், விளைச்சல் இல்லாமல், தக்காளி ஒரு கிலோ, 140 ரூபாயை எட்டியுள்ளது.அன்னுார் வட்டாரத்தில், 2,000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் காய்கறிப் பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. கடந்த ஒரு மாதமாக அடிக்கடி மழை பெய்து வருகிறது. இதனால் தக்காளி செடியில் பூக்கள் உதிர்ந்தும், சில தோட்டங்களில் தண்ணீர் தேங்கியதால் செடிகள் அழுகியும் விளைச்சல் கடுமையாக
 தக்காளி விலை உச்சம் :அன்னூரில் கிலோ ரூ. 140

அன்னுார்:மழை காரணமாக, அன்னுார் வட்டாரத்தில், விளைச்சல் இல்லாமல், தக்காளி ஒரு கிலோ, 140 ரூபாயை எட்டியுள்ளது.அன்னுார் வட்டாரத்தில், 2,000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் காய்கறிப் பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. கடந்த ஒரு மாதமாக அடிக்கடி மழை பெய்து வருகிறது. இதனால் தக்காளி செடியில் பூக்கள் உதிர்ந்தும், சில தோட்டங்களில் தண்ணீர் தேங்கியதால் செடிகள் அழுகியும் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது.கர்நாடகாவில் இருந்து அன்னுார் வார சந்தை மற்றும் காய்கறி கடைகளுக்கு தக்காளி வரத்து பெருமளவு குறைந்து விட்டது. மொத்த விற்பனையில், 28 கிலோ தக்காளி அடங்கிய பெட்டி 3,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி, 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சிறிய ரகம், 110 ரூபாய்க்கும், தரமான தக்காளி, 140 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது.அன்னூரில் கடந்த சில ஆண்டுகளில் தக்காளி விலை ஒரு கிலோ 140 ரூபாய்க்கு விற்பனை ஆவது, இதுவே முதல் முறை என காய்கறி வியாபாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X