பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வர் உறுதிமொழி: விவசாயிகள் மகிழ்ச்சி

Added : நவ 23, 2021
Share
Advertisement
அன்னுார்:முதல்வர் உறுதிமொழியால், அன்னுார் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.அன்னுார் தாலுகாவில், குப்பனுார், அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலூர், மேட்டுப்பாளையம் தாலுகாவில், பள்ளேபாளையம், இலுப்பநத்தம் ஆகிய ஆறு ஊராட்சிகளில், 3,800 ஏக்கர் பரப்பில் தொழிற்பேட்டை அமைக்க, தமிழக அரசு ஆயத்த பணிகள் செய்து வருகிறது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொழில்பேட்டையை எதிர்த்து,

அன்னுார்:முதல்வர் உறுதிமொழியால், அன்னுார் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.அன்னுார் தாலுகாவில், குப்பனுார், அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலூர், மேட்டுப்பாளையம் தாலுகாவில், பள்ளேபாளையம், இலுப்பநத்தம் ஆகிய ஆறு ஊராட்சிகளில், 3,800 ஏக்கர் பரப்பில் தொழிற்பேட்டை அமைக்க, தமிழக அரசு ஆயத்த பணிகள் செய்து வருகிறது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொழில்பேட்டையை எதிர்த்து, போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று கோவையில் முதல்வர் ஸ்டாலினை, விவசாயிகள் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.விவசாயிகள் கூறுகையில், 'தொழிற்பேட்டை அமைப்பதால், இந்த பகுதியில் நிலத்தடி நீர் மாசுபடும். 50 ஆயிரம் மக்கள் பாதிக்கப்படுவர். விவசாயம், கால்நடை வளர்ப்பு அழியும். எனவே, இத்திட்டத்தை கைவிட வேண்டும், என வலியுறுத்தி மனு கொடுத்தோம். அப்போது முதல்வர், 'விவசாயிகளின் நலன் காக்கப்படும். விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் எந்த ஒரு தொழிற்சாலையும் வர அனுமதிக்க மாட்டோம்' என தெரிவித்தார். முதல்வரின் உறுதிமொழி எங்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X