குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் தேங்கியுள்ள கழிவு நீரால் பாதிப்பு

Added : நவ 23, 2021
Share
Advertisement
தண்டையார்பேட்டை, நவ. 2௪--தண்டையார்பேட்டை, சுனாமி குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் கழிவு நீர் தேங்கியுள்ளதால், அப்பகுதி மக்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.சென்னை தண்டையார்பேட்டை, சேணியம்மன் கோவில் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில், ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். இங்கு, மழை நீரில் கழிவு நீர் கலந்து தேங்கி உள்ளது.இதனால், அப்பகுதியில்

தண்டையார்பேட்டை, நவ. 2௪--தண்டையார்பேட்டை, சுனாமி குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் கழிவு நீர் தேங்கியுள்ளதால், அப்பகுதி மக்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

சென்னை தண்டையார்பேட்டை, சேணியம்மன் கோவில் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில், ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். இங்கு, மழை நீரில் கழிவு நீர் கலந்து தேங்கி உள்ளது.இதனால், அப்பகுதியில் கழிவு நீர் குட்டை போல தேங்கி, கடும் துர்நாற்றம் வீசுகிறது. விஷப் பூச்சிகளும், வண்டுகளும், கொசுக்களும் இரவு நேரங்களில் வீடுகளுக்குள் படையெடுக்கின்றன. இதன் விளைவாக, இப்பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர், மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளதாக, அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, தேங்கியுள்ள கழிவு நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X