மும்பை தாக்குதல் சம்பவம்: சொந்த கட்சிக்கு எதிராக மணிஷ் திவாரி சர்ச்சை கருத்து| Dinamalar

மும்பை தாக்குதல் சம்பவம்: சொந்த கட்சிக்கு எதிராக மணிஷ் திவாரி சர்ச்சை கருத்து

Updated : நவ 25, 2021 | Added : நவ 23, 2021 | கருத்துகள் (13)
Share
புதுடில்லி :'பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 2008ல் மும்பையில் நடத்திய தாக்குதலுக்கு அப்போதைய மத்திய அரசு சரியான பதிலடி தந்திருக்க வேண்டும்' என, காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் கடந்த 2008, நவம்பர் 26ம் தேதியன்று, படகு வழியே மஹாராஷ்டிராவின் மும்பை நகருக்குள் நுழைந்து ரயில் நிலையம், ஓட்டல்
மும்பை தாக்குதல் , சொந்த கட்சி, மணிஷ் திவாரி, காங்கிரஸ், சர்ச்சை

புதுடில்லி :'பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 2008ல் மும்பையில் நடத்திய தாக்குதலுக்கு அப்போதைய மத்திய அரசு சரியான பதிலடி தந்திருக்க வேண்டும்' என, காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் கடந்த 2008, நவம்பர் 26ம் தேதியன்று, படகு வழியே மஹாராஷ்டிராவின் மும்பை நகருக்குள் நுழைந்து ரயில் நிலையம், ஓட்டல் உள்ளிட்ட பொது இடங்களில் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 160 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட ஒன்பது பயங்கரவாதிகளை போலீசார் சுட்டுக் கொன்றனர். கைதான பயங்கரவாதி அஜ்மல் கஸாப் 2012, நவம்பரில் துாக்கிலிடப்பட்டார். இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நடந்தபோது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் ஆட்சியில் இருந்தது.பலவீனம்அப்போது மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சராக இருந்தவர் மணிஷ் திவாரி. காங்கிரஸ் மூத்த தலைவரான இவர், '10 பிளாஷ் பாயின்ட்ஸ்; 20 இயர்ஸ் நேஷனல் செக்யூரிட்டி சிச்சுவேஷன்ஸ் தட் இம்பாக்டெட் இந்தியா' என்ற புத்தகத்தை எழுதி சமீபத்தில் வெளியிட்டார்.

அதில், 'மும்பை தாக்கப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு நாம் சரியான பதிலடி தந்திருக்க வேண்டும். அது போன்ற நேரங்களில் அதிரடியில் இறங்குவதே பலன் அளிக்கும். அமைதி காப்பது பலம் அல்ல. பலவீனமாகவே கருதப்படும்' என, குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்து பல்வேறு தரப்பிலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா செய்தி யாளர்களிடம் கூறியதாவது: மணிஷ் திவாரி புத்தகத்தில் எழுதியுள்ள கருத்தில் தவறு இல்லை. காங்கிரஸ் அரசு செய்த தவறுகளை ஏற்றுக் கொண்டு அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பயங்கரவாத சம்பவம்


தேசிய பாதுகாப்பு குறித்து துளியும் அக்கறையின்றி, பொறுப்பற்ற முறையில் காங்கிரஸ் அரசு செயல்பட்டது இதன் வாயிலாக உறுதியாகிறது.அந்த நேரத்தில் பாகிஸ்தானுக்கு பதிலடி தர நம் ராணுவத்தினர் அனுமதிக்கப்படாதது ஏன் என்பது குறித்து சோனியா, ராகுல் பதில் அளிப்பரா? இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து, மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, கூறியதாவது: மணிஷ் திவாரி கூறியிருப்பது முற்றிலும் உண்மை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில், நிறைய பயங்கரவாத சம்பவங்கள் அரங்கேறின. அவற்றை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதில், அன்றைய அரசு தரப்பில் சுணக்கமே தென்பட்டது. ஆனால், தற்போதைய நரேந்திர மோடி தலைமையிலான அரசு தீவிரவாத சக்திகளுக்கு, இம்மியளவு கூட இடம் தராமல் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X