9 நாட்களாக குடிநீர் 'கட்': தவிக்கும் கிராம மக்கள்

Added : நவ 23, 2021
Share
Advertisement
அன்னுார்:குழாய் உடைப்பு காரணமாக, ஒன்பது நாட்களாக, ஆறு ஊராட்சிகளுக்கு, குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.மேட்டுப்பாளையம், பவானி ஆற்றில் இருந்து வழியோர கிராமங்களுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தில், ஒட்டர்பாளையம், வடக்கலூர், அ.மேட்டுப்பாளையம், கஞ்சப்பள்ளி உள்ளிட்ட ஆறு ஊராட்சிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. குழாய் உடைப்பு காரணமாக கடந்த 15ம் தேதி முதல்

அன்னுார்:குழாய் உடைப்பு காரணமாக, ஒன்பது நாட்களாக, ஆறு ஊராட்சிகளுக்கு, குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.மேட்டுப்பாளையம், பவானி ஆற்றில் இருந்து வழியோர கிராமங்களுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தில், ஒட்டர்பாளையம், வடக்கலூர், அ.மேட்டுப்பாளையம், கஞ்சப்பள்ளி உள்ளிட்ட ஆறு ஊராட்சிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. குழாய் உடைப்பு காரணமாக கடந்த 15ம் தேதி முதல் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.ஊராட்சி தலைவர்கள் கூறுகையில், 'ஒவ்வொரு ஊராட்சிக்கும் சராசரியாக இரண்டு லட்சம் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்ய வேண்டும். ஒன்பது நாட்களாக ஒரு சொட்டு நீர் கூட வரவில்லை. குழாய் பராமரிப்பு பணி மிகவும் மெத்தனமாக நடக்கிறது. 48 கிராமங்களைச் சேர்ந்த, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் குடிநீர் இல்லாமல் தவிக்கின்றனர். பழுது பார்க்கும் பணியை முடித்து, விரைவில் குடிநீர் விநியோகத்தை துவக்க வேண்டும்' என்றனர்.தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் கமலக்கண்ணன் கூறுகையில், ''குழாய் உடைப்பு பழுதுபார்க்கும் பணி முடிந்து விட்டது. விரைவில் குடிநீர் சப்ளை துவங்கும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X