சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் உண்ணாவிரதம்

Added : நவ 23, 2021
Share
Advertisement
அன்னுார்:அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அன்னுாரில் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.'ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள பணப் பயன்கள், அகவிலைப்படி உயர்வு மற்றும் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். 2019 செப்., உடன் முடிந்த சம்பள ஒப்பந்த பேச்சுவார்த்தை உடனே துவக்க வேண்டும். வரவுக்கும், செலவுக்கும் உள்ள வித்தியாசத் தொகையை அரசே,

அன்னுார்:அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அன்னுாரில் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.'ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள பணப் பயன்கள், அகவிலைப்படி உயர்வு மற்றும் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். 2019 செப்., உடன் முடிந்த சம்பள ஒப்பந்த பேச்சுவார்த்தை உடனே துவக்க வேண்டும். வரவுக்கும், செலவுக்கும் உள்ள வித்தியாசத் தொகையை அரசே, போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்க வேண்டும். பேட்டா மற்றும் ஊக்கத்தொகை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். வார ஓய்வு மீண்டும் வழங்க வேண்டும்' என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று அன்னுார் அரசு போக்குவரத்து கழக கிளை முன், சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் சார்பில் போக்குவரத்து ஊழியர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.மண்டல துணை தலைவர் மணிவேல் பேசினார். கிளை தலைவர் வேலுமணி, செயலாளர் பாலசுப்பிரமணியம் உட்பட பலர் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X