பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகள் பாதுகாப்பு: விழிப்புணர்வு நிகழ்ச்சி

Added : நவ 23, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:காரமடை எஸ்.வி.ஜி.வி., மெட்ரிக் மேல்நிலை பள்ளியில், மாவட்ட காவல் துறை சார்பில், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் பேசியதாவது:மாணவர்கள் மொபைல் போனை கல்விக்காக மட்டுமே பயன்படுத்தவேண்டும். பள்ளிகளிலேயே மாணவியருக்கு அடிப்படை தற்காப்பு பயிற்சிகளை வழங்குவது அவசியம்.எந்த

மேட்டுப்பாளையம்:காரமடை எஸ்.வி.ஜி.வி., மெட்ரிக் மேல்நிலை பள்ளியில், மாவட்ட காவல் துறை சார்பில், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் பேசியதாவது:மாணவர்கள் மொபைல் போனை கல்விக்காக மட்டுமே பயன்படுத்தவேண்டும். பள்ளிகளிலேயே மாணவியருக்கு அடிப்படை தற்காப்பு பயிற்சிகளை வழங்குவது அவசியம்.எந்த சிக்கல்களுக்கும் தற்கொலை தீர்வாகாது. பிரச்னை எதுவாயினும் பெற்றோர், ஆசிரியர் என உங்கள் நம்பிக்கைக்கு உரியவர்களிடம் வெளிப்படையாக தெரிவிக்கவேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.பள்ளி தாளாளர் பழனிசாமி, பள்ளி முதல்வர் சசிகலா, சப்-இன்ஸ்பெக்டர் நெல்சன், தலைமை காவலர் ஜோதி, பள்ளி செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X