பொது செய்தி

தமிழ்நாடு

வாழைக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

Added : நவ 23, 2021
Share
Advertisement
கோவில்பாளையம்:வாழை மற்றும் மரவள்ளிக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.சர்க்கார் சாமக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அனிஷா பேகம் வெளியிட்டுள்ள அறிக்கை:பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில், விவசாயிகள் வாழை மற்றும் மரவள்ளிக்கு காப்பீடு செய்து கொள்ளலாம். அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட

கோவில்பாளையம்:வாழை மற்றும் மரவள்ளிக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.சர்க்கார் சாமக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அனிஷா பேகம் வெளியிட்டுள்ள அறிக்கை:பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில், விவசாயிகள் வாழை மற்றும் மரவள்ளிக்கு காப்பீடு செய்து கொள்ளலாம். அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், பொது சேவை மையம், வேளாண் காப்பீடு நிறுவனம் வாயிலாக இதற்கு பதிவு செய்து கொள்ளலாம்.காப்பீடு கட்டணமாக, வாழைக்கு ஒரு ஏக்கருக்கு, 4,642 ரூபாயும், மரவள்ளிக்கு ஒரு ஏக்கருக்கு 1,630 ரூபாயும் செலுத்த வேண்டும். இத்திட்டத்தில் காப்பீடு செய்து கொள்ள, அடுத்த ஆண்டு பிப்., 28 கடைசி நாள். விவரங்களுக்கு, உதவி தோட்டக்கலை அலுவலர்களை 90926 21316, 95248 23302 என்னும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X